அருள்மிகு ஜுவாலமுகி சக்திப்பீடத் திருக்கோயில், இமாச்சலப்பிரதேசம்
முகவரி
அருள்மிகு ஜுவாலாமுகி திருக்கோவில் காங்ரா, ஜுவாலாமுகி இமாச்சலப் பிரதேசம் 176031. தொலைபேசி எண் +91 01970-222223, 01970-222137.
இறைவன்
சக்தி: ஜுவாலாமுகி பைரவர்: உன்மாதபைரவர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: நாக்கு
அறிமுகம்
ஜுவாலாமுகி அம்மன் கோயில் இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஜுவாலாமுகியும் ஒன்றாகவும் மற்றும் நவ சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தத் திருத்தலத்தில் சக்திதேவி தீச்சுடராக காட்சி தருகின்றாள். காலம் காலமாக இந்த இடங்களில் இருக்கும் பழமையான பாறையின் இடுக்குகளில் இருந்து நீலநிறமான தீ ஜுவாலைகள் இயற்கையாகவே அணையாமல் எரிந்து கொண்டிருக்கின்றது. இப்படி ஒன்பது இடங்களில் எரிந்து கொண்டிருக்கின்ற தீ ஜுவாலைகளை தேவியின் வடிவம் என்று கருதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் சக்தி தேவியானவள் காளிதேவி ரூபத்தில் காட்சி தருகின்றார்.
புராண முக்கியத்துவம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் பாதம் விழுந்ததாகக் கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு பூமிசந்த் என்னும் மன்னன் காங்க்ரா நகரத்தை தலைநகரமாக கொண்டு இந்த கோவில் இருக்கும் பகுதியை ஆண்டு வந்தான். இந்த மன்னர் ஒரு சிறந்த தேவி பக்தர். மன்னரின் கனவில் தோன்றிய சக்தி தேவியானவள் தீச்சுடரின் வடிவில் அம்பாள் வீற்றிருக்கும் இடத்தை மன்னருக்கு தெரியப்படுத்தினாள். அந்த இடத்தைத் தேடி கண்டுபிடித்த மன்னன் ஜுவாலாமுகிக்கு ஆலயத்தை எழுப்பினார்.
நம்பிக்கைகள்
இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த முகலாய பேரரசர் அக்பர், இந்த ஆலயத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்கு எரிந்து கொண்டிருக்கும் தீ ஜுவாலைகளை அணைக்க முயற்சி செய்தார். தனது வீரர்கள் நீரை ஊற்றி, பல முயற்சிகளை செய்தும் அந்த தீ ஜுவாலைகள் அணையவில்லை. இதன் மூலம் தேவியின் சக்தியை உணர்ந்த அக்பர் ஒரு தங்க குடையை இந்த கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தி தனது வேண்டுதல்களை நிறைவேற்றும் படி தேவியிடம் வேண்டிக்கொண்டார். தேவியானவள் அக்பரின் வேண்டுதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக அவர் அளித்த தங்கக் குடையானது சாதாரணமான உலோகமாக மாறிவிட்டது என்று கூறுகிறது வரலாறு.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பதான்கோட்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காங்ரா
அருகிலுள்ள விமான நிலையம்
காங்ரா