Monday Jan 27, 2025

அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், மும்பை

முகவரி

அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயம், எஸ்.கே. போலேமார்க், பிரபாதேவி மும்பை – 400028 Phone: +91 22 2437 3626

இறைவன்

இறைவன்: சித்தி விநாயகர் இறைவி: ரித்தி மற்றும் சித்தி

அறிமுகம்

மும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சித்தி விநாயக் மந்திர் 1801-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயில் முன்பு சிறிய செங்கல் கட்டிடமாக காட்சியளித்துக்கொண்டிருந்தாலும், இன்று மும்பையின் செல்வச் செழிப்பான கோயிலாக திகழ்ந்து வருகிறது. தூரத்தில் இருந்தாலும் இந்த கோயிலின் கோபுரம் தெரியும் வகையில், மிக உயரமாக, 5 அடுக்கு கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. கோயிலின் கருவறைக்கு மேலே சுமார் 12 அடி உயர, தங்க முலாம் பூசப்பட்ட பெரிய கலசம் உள்ளது. மற்ற கலசங்களில் சிறிய கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலில் உள்ள கணபதி விக்கிரகம் ஒற்றை கருங்கல்லால் ஆனது. இரண்டடி உயரம், இரண்டடி அகலம் கொண்ட இந்த கணபதியை மராட்டியில் நவசாக கணபதி, நவச பவனார கணபதி என அழைக்கின்றனர். இந்த சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு என தனி சன்னதி உள்ளது.வாவி நிறத்தில் அழகிய மண்டபத்தில் வாலை உயர்த்திய படி அனுமன் அருள்பாலிக்கின்றார்.

புராண முக்கியத்துவம்

மும்பையில் வசித்த டியூபாய் பட்டில் என்ற பெண் குழந்தை வரம் வேண்டி ஏங்கினார். தனக்கு குழந்தை பிறந்தால் விநாயகர் ஆலயம் கட்டுவதாக வேண்டிக்கொண்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரின் கணவர் காலமாகி விட்டதால், அவரின் வேண்டுதல் பலிக்கவில்லை. இருப்பினும் அவரின் விநாயகர் ஆலயம் கட்ட வேண்டும் என்ற ஆவல் மட்டும் குறையவில்லை. அவர் வைத்திருந்த நாட்காட்டியில் உள்ள விநாயகர் திருவுருவம் போல விக்ரகம் அமைய வேண்டும் என விரும்பினார். ஆனால் அது பாங்காங்கா வாக்லேஷ்வரில் உள்ள விநாயகர் விக்ரகத்தை ஒத்திருந்தது. அந்த கோயில் 500 ஆண்டு பழமையானது. ஒருநாள் தியூபாய் பாட்டில் விநாயகரை தரிசிக்கும் போது ஒரு வேண்டுதல் உதயமானது. இந்த முறை தனக்காக அல்லாமல், தன்னைப் போன்று குழந்தை இல்லாமல் வருந்தும் பெண்களுக்கு குழந்தை வரம் அளிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இந்த கோயிலை காலம்சென்ற திரு லக்ஷ்மண் விது பாட்டில் கட்டினார். இங்குள்ள சித்தி விநாயகர் 2 அடி, 6 அங்குல உயரம், 2 அடி அகலமும் கொண்டது. மற்ற விநாயகர் கோயிலில் உள்ளது போன்று இல்லாமல், இந்த சித்தி விநாயகர் தனது தும்பிக்கை இடது பக்கம் வைத்திருப்பதற்கு பதிலாக, வலது பக்கம் இருப்பது மிகவும் சிறப்பு. இந்த விநாயகரின் வலது கயில் தாமரையும், இடது கையில் கோடரியும் தாங்கி இருக்கின்றார். கீழே உள்ள இடது கையில் ஒரு கிண்ணம் நிறைய மோதகம் உள்ளது. வலது கீழே உள்ள கையில் ஜெப மாலை வைத்துள்ளார். விநாயகர் பூணூலை ஒத்த ஒரு பாம்பு உருவம் பூணல் போன்று பொறிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட விநாயகரின் நெற்றியில் கண் உள்ளது மிக விசித்திரமாக பார்க்கப்படுகின்றது. நெற்றிக்கண் கொண்ட விநாயகரின் காலடியில் பளிங்கால் ஆன இரண்டு தேவியர் உள்ளனர். விநாயகரின் இருபுறமும் ரித்தி மற்றும் சித்தி என்ற இரு பெண் தெய்வங்கள் உள்ளன. இவர்கள் விநாயகரின் பின் பகுதியிலிருந்து முளைத்து இருப்பது போன்றும், வளைந்து முன்பகுதியில் காட்சியளிக்கும் வண்ணம் விக்ரகம் அமைந்துள்ளது. இரு பெண் தெய்வங்களுடன் காட்சி அளிப்பதால் இந்த விநாயகர் சித்தி விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.

நம்பிக்கைகள்

குழந்தை வரம் தரும் சக்தி வாய்ந்தவராக இந்த சித்தி விநாயகர் திகழ்கின்றார். வேண்டியது நிறைவேறினால், கோயிலுக்கு வந்து விளக்கேற்றி, எருக்கம்பூ, இலை மாலையை அணிவித்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இந்த கோயிலில் உள்ள சித்தி விநாயகர், மற்ற கோயிலில் உள்ள விநாயகரைப் போன்று இல்லாமல், இடது பக்கம் தும்பிக்கைக்கு பதிலாக, வலது பக்கமாக தும்பிக்கையை வைத்துள்ளார், இந்த கோயிலில் உள்ள சித்தி விநாயகர்.

திருவிழாக்கள்

விநயாகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, ஸ்ரீ சத்ய நாராயண பூஜை, பஞ்சாமிர்த பூஜையோடு, ஒவ்வொரு நாளும் இரவு 7.30 மணிக்கு நடக்கும் தீப ஆரத்தி மிக சிறப்பானதாகும். ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே செவ்வாய் கிழமைகளில் சங்கடஹர சதுர்த்தி வரும். இதை அங்காரக சதுர்த்தி என்பர். அந்த நாளில் விநாயகரை தரிசிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.

காலம்

18 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

மகாராஷ்டிரா

அருகிலுள்ள இரயில் நிலையம்

கர்ஜத்

அருகிலுள்ள விமான நிலையம்

மும்பை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top