Sunday Nov 24, 2024

அருள்மிகு சாயா சோமேஸ்வரர் திருக்கோயில்

முகவரி

அருள்மிகு சாயா சோமேஸ்வரர் திருக்கோயில், பனகல் நல்கொண்டா, தெலுங்கானா – 508 004.

இறைவன்

இறைவன்: சாயா சோமேஸ்வரர்

அறிமுகம்

சாயா சோமேஸ்வரர் கோயில் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த சிவன் கோயில் ஆகும். 10ம் நூற்றாண்டில் கன்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஃ வடிவில் மூன்று கருவறைகள் உள்ளது. பகல் நேரம் முழுவதும் தூணின் நிழல் சிவபெருமான் மீது விழும் அதிசயக் கோவில், சூரியனின் மனைவி சாயா வழிபடும் இறைவன், சிவன் – விஷ்ணு – சூரியன் ஆகிய மூவருக்கும் முக்கோண அமைப்பில் அமைந்த ஆலயம், கருங்கல்லால் ஆன பிரமிடு வடிவ கருவறைக் கோபுரங்கள் கொண்ட கோவில், ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் தூணில் சிற்பங்களாக அமைந்துள்ள திருத்தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது.

புராண முக்கியத்துவம்

இக்கோவிலை சூரியனின் மனைவியான சாயாதேவி வழிபடுவதாக தல வரலாறு சொல்கிறது. ‘சாயா’ என்பதற்கு ‘நிழல்’ என்று பொருள். அதன் படியே சுவாமி சன்னிதியின் எதிரே சூரியன் பயணம் செய்ய, ஏழு குதிரைகளுடன் கூடிய பீடம் மட்டுமே அமைந்துள்ளது. சிலை வடிவம் இல்லை. இந்த ஐதீகத்தில் குண்டூர் சோழர்கள் ஆட்சியில் எழுப்பப்பட்டதுதான் இந்த பனகல் சாயா சோமேஸ்வரர் திருக்கோவில் ஆகும். கி.பி. 1040 முதல் 1290-ம் ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ஆட்சி செய்த குண்டூர் சோழர்கள் காலத்தில், இங்கு எண்ணற்ற ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அதில் பனகலில் மட்டும் இரண்டு சிவாலயங்கள் கட்டப்பட்டன. அதில் ஒன்று சாயா சோமேஸ்வரர் திருக்கோவில். இது முக்கோண வடிவிலும், மூன்று கருவறை விமானங்கள், மூன்று பிரமிடு வடிவிலும் கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கியபடி, சாயா சோமேஸ்வரர் காட்சி தருகிறார். எதிரில் நந்தி, பலிபீடம் உள்ளது. ஆலயத்திற்கு வடக்கு நோக்கிய விஷ்ணு சன்னிதி, மேற்கு நோக்கிய சூரியன் சன்னிதி இருக்கின்றன. போரில் ஏற்பட்ட சிதைவால், அங்கு பீடங்கள் மட்டுமே காணப்படுகின்றன. கருவறை முன்புறம், விநாயகர், முருகன் பீடங்கள் அமைந்துள்ளன. கருவறையில் ஐந்து படிகள் கீழே, சாயா சோமேஸ்வரர் பூமியோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு, லிங்கத் திருமேனியில் நமக்கு காட்சியளிக்கிறார். சிவன், விஷ்ணு, சூரியன் சன்னிதிகளின் எதிரே மையமாக, நான்கு நாற்பட்டை வடிவத் தூண்கள் அமைந்துள்ளன. இந்தத் தூண்களின் கற்கள் அபூர்வமானதாக உள்ளன. இதில் மகாபாரதம், ராமாயணம் சிற்பங்கள் வெகு நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள லிங்கத்திற்கு பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. நிழலில் என்ன அதிசயம் என்றால், காலைமுதல் மாலை வரை அந்த நிழல் நகர்வதே கிடையாது. அதோடு இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவதே கிடையாது. பொதுவாக சூரியன் நகர நகர நிழலும் நகர்ந்துகொண்டே போகும் அது தான் உலக நியதி. அனால் இங்கு சூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை அந்த நிழல் நகராமல் ஒரே இடத்தில உள்ளது. இந்த கருவறைக்கு முன்பு நான்கு தூண்கள் உள்ளன. அனால் கருவறையில் விழும் நிழல் எந்த தூணிற்கானது என்று கண்டறியவே முடியவில்லை. எந்த தூணிற்கு பக்கத்தில் நாம் நின்று பார்த்தாலும் தூணின் நிழல் மட்டுமே கருவறையில் விழுகிறதே தவிர நமது நிழல் விழுவதில்லை. இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவர் தன்னுடைய நான்கு நிழல்களை பார்க்க முடியும். எப்படி ஒரு உருவத்திற்கு நான்கு நிழல்கள் விழுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவரது நிழல் எப்பொழுதும் அவருக்கு எதிர் திசையிலே விழும். நிழல் எப்படி எப்போதும் எதிர் திசையிலே விழுகிறது என்பது கணிக்கமுடியாத ஒன்றாகவே உள்ளது. சாயா என்றால் நிழல் என்று பொருள் அதனால் தான் இந்த கோயிலிற்கு சாயா சோமேஸ்வரர் என்று பெயர்வந்துள்ளது. நிழலை வைத்து பல மர்மங்களோடு இந்த கோவிலை கட்டியுள்ளதால், இந்த கோயிலின் கடவுள் நிழல்களின் தெய்வம் என்றே அழைக்கப்படுகிறார். ரங்கா மண்டபம் என்ற அர்த்த மண்டபம் ஒன்று எதிரில் உள்ளது. அதில் நான்கு அழகிய சிற்ப செதுக்கல்களுடன் நான்கு தூண்கள் உள்ளன; அதில் இருபுறமிருந்து வரும் சூரிய ஒளிக்கற்றைகள் பட்டு ஊடறுத்து செல்லும்போது மேற்கில் அமைந்துள்ள கருவறை லிங்கத்தின் மேல் ஒரு அசையாத நிழல் தூணாக விழுகிறது. இது சிவாலய கட்டுமானத்தில் மிக அதிசயிக்க தக்க அளவில் உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

பகல் நேரம் முழுவதும் லிங்கத் திருமேனியின் மீதும், அதன் பின் புறம் சுவரிலும், ஒரு தூணின் நிழல் விழுகின்றது. அதுமட்டுமின்றி, பகல் முழுவதுமே இந்த தூணில் நிழல் ஒரே இடத்திலேயே இருப்பதுதான் பெரிய ஆச்சரியம். பவுர்ணமி நேரத்திலும் இந்த நிழல் விழுவதாக கோவில் பக்தர்கள் கூறுகின்றனர். கருவறைக்கு முன்புறம் நான்கு பட்டை வடிவ தூண்கள் உள்ளன. ஆனால் கருவறைக்குள் விழும் நிழல் எந்த தூணுக்கானது என்பதை கண்டறிய முடியவில்லை. மேலும், கருவறை வாசலில் நின்றால், நம்முடைய நிழல் இண்டாகவும், சுவாமி மீது விழும் நிழல் அதே நிலையிலும் இருப்பது உலக அதிசயம்தான்.

காலம்

1000 to 2000

நிர்வகிக்கப்படுகிறது

தெலுங்கானா

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பனகல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பனகல்

அருகிலுள்ள விமான நிலையம்

ஹைதரபாத்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top