அருள்மிகு காமாக்யா சக்தி பீடக் கோவில், அசாம்
முகவரி
அருள்மிகு காமாக்யா தேவி சக்தி பீடக் கோவில் காமாக்யா, குவாகத்தி, அசாம் – 781010
இறைவன்
சக்தி: காமாக்யா பைரவர்: உமானந்த், உடல் பகுதி அல்லது ஆபரணம்: யோனி
அறிமுகம்
காமாக்கியா கோவில் காமாக்கியா என்ற இந்துக் கடவுளின் கோவில் ஆகும். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இந்தியாவில் அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரின் மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும். இவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன. ஏனைய ஏழும் தனித்தனிக் கோவில்களாக அமைக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாச்சல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இது தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் யோனி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
திருவிழாக்கள்
அம்புபச்சி மேளா – அம்புபாச்சி என்ற சொல் அம்பு மற்றும் பச்சி ஆகிய இரண்டு சொற்களால் ஆனது, அங்கு அம்பு என்பது தண்ணீர் என்றும், பச்சி என்றால் மலச்சிக்கல் என்றும் பொருள். அம்புபாச்சி மேளா நாடு முழுவதும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும், மேலும் காமக்கியா கோயிலின் புனித பண்டிகைகளில் ஒன்றாகும். துர்க்கை பூஜை, மானஷா பூஜை
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நீலாச்சல் குன்று
அருகிலுள்ள இரயில் நிலையம்
குவாகத்தி
அருகிலுள்ள விமான நிலையம்
குவாகத்தி