Wednesday Dec 25, 2024

அருள்மிகு கங்கோத்ரி திருக்கோயில், உத்தரகாசி

முகவரி

அருள்மிகு கங்கோத்ரி திருக்கோயில், உத்தரகாசி மாவட்டம் ,உத்தரகாண்ட்

இறைவன்

இறைவி: சிவன்

அறிமுகம்

கங்கோத்திரி கோயில் இந்தியாவின் இமயமலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில், உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்திரி மலையில் 3,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கங்கை ஆற்றின் பிறப்பிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கங்கை அம்மனுக்கு இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சார்-தாம் எனும் நான்கு கோயில்களுள் கங்கோத்திரி கோயிலும் ஒன்று. மற்ற கோயில்கள்: யமுனோத்திரி கோயில், கேதார்நாத் கோயில், மற்றும் பத்ரிநாத் கோயில். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அமர்சிங் தாபா எனும் நேபாள இராணுவ தளபதி (கூர்க்கா படைத்தலைவர்), மிகச்சிறிதாக இருந்த இக்கோயிலைப் புதுப்பித்துக் கட்டினார். கோமுகம் எனும் பனிச்சிகரங்களிலிருந்து துவங்கும் கங்கை ஆற்றுக்கு பாகீரதி என்றும், தேவபிரயாகை நகரில் அலக்ந்தா ஆற்றுடன் கலக்கும் போது இவ்வாற்றுக்கு கங்கை ஆறு என்றும் பெயர்.

புராண முக்கியத்துவம்

இராமரின் முன்னோரான பகீரதன் என்பவர், தன் அறுபதாயிரம் முன்னோர்களுக்கு கபில முனிவரால் உண்டான சாபத்தை நீக்குவதற்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். தவத்தினை பாராட்டிய சிவபெருமான், தேவலோகத்தில் ஓடிக் கொண்டிருந்த கங்கை ஆற்றினை பூலோகத்தில் இறக்குவதற்கு முன், முதலில் தன் சடாமுடியில் தாங்கி, பின் சடைமுடியின் ஒரு பகுதியின் வழியாக கங்கை ஆற்றை பூமியில் இறக்கினார். கங்கை நீர் பட்டவுடன் பகீரதனின் முன்னோர்கள், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சாபத்திலிருந்து விடுபட்டு வீடுபேறு எனும் முக்தி அடைந்தனர். எனவேதான் கங்கை ஆற்றை புனித ஆறு என்று அழைக்கின்றனர்.

காலம்

10 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

உத்தரகாசி

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முசோரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

ரிஷிகேஷ்

அருகிலுள்ள விமான நிலையம்

ஜோலி கிராண்ட்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top