Wednesday Dec 25, 2024

அருள்மிகு ஆழத்துப் பிள்ளையார், திருமுதுகுன்றம்

முகவரி

அருள்மிகு ஆழத்துப் பிள்ளையார், திருமுதுகுன்றம், அ.மி.பழமலைநாதர் திருக்கோயில் விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலம் – அஞ்சல் – 606 001.

இறைவன்

ஆழத்துப் பிள்ளையார்.

அறிமுகம்

இரண்டாம் படை வீடு – விருத்தாசலம் : ஆழத்துப் பிள்ளையார். பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர்…மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற- காசிக்குச் சமமானதாகக் கருதப்படுகிற விருத்தாசலத்தில் உள்ள பிரம்மாண்டமான ஆலயம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம். இங்கு எழுந்தருளியுள்ளார் ஆழத்துப் பிள்ளையார். பெயருக்கேற்றவாறு ஆழத்தில் சந்நிதி கொண்டுள்ளார். படிக்கட்டுகளில் இறங்கிச்சென்றுதான் விநாயகரை தரிசிக்கவேண்டும். இவரை வணங்கினால் கல்வியும் செல்வமும் கிடைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை. திருமாலின் சக்கரத்தால் உண்டாக்கப்பட்ட சக்கர தீர்த்தத்தைச் சுற்றிலும் நந்தவனம் உள்ளது. இக்கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு மூலையில் 28 ஆகமக் கோயில் உள்ளது. முருகக் கடவுள் 29 ஆகமங்களையும் சிவலிங்கங்களாக வைத்துப் பூசித்தார் என்பது இதன் வரலாறு. காமிகேசுவரர் முதலாக வாதுளேசர் ஈறாக ஆகமங்களின் பெயர்களை இத்திருமேனிகள் பெற்றுள்ளன.

புராண முக்கியத்துவம்

முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

நம்பிக்கைகள்

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ‘ஆழத்துப் பிள்ளையார்” என்று பெயர். செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

சிறப்பு அம்சங்கள்

• இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. • இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று. • காசியை விட வீசம்(தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு. • 63 நாயன்மார்கள் சிலை காண்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது.

திருவிழாக்கள்

மாசி மகம், பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமுதுகுன்றம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருத்தாசலம்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top