Wednesday Dec 25, 2024

அருள்மிகு அநேகதங்காபதேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில், அனேகதங்காவதம் – 631 501. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2722 2084.

இறைவன்

இறைவன்: கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் இறைவி:காமாட்சி

அறிமுகம்

பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் நீராடச்சென்றபோது, நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு “வல்லபை’ என பெயரிட்டு வளர்த்து வந்தார்.சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான். வல்லபை, தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். சிவன், விநாயகரை அனுப்பி வல்லபையை மீட்டுவர எண்ணினார். அப்போது அம்பிகை சிவனிடம், விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும் என்றாள். சிவன், இத்தலத்தில் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார். விநாயகரும் அசுரர்களை அழிக்க செல்லும்முன்பு, இவ்விடத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின், வல்லபையை மீட்டு வந்தார். சிவன், அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர்.

புராண முக்கியத்துவம்

அனேகதம் என்றால் யானை. யானை முகத்தையுடைய விநாயகர் சிவலிங்கத் திருமேனியை நிறுவி வழிபட்ட தலம். ஆதலால் இது அநேகதங்காபதம் என்று பெயர் பெற்றது. குபேரன் வழிபட்ட பெருமையுடையது இத்தலம்.

நம்பிக்கைகள்

இங்கு வேண்டிக்கொள்ள பணி, பதவி உயர்வு கிடைக்கும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

குபேரன், தன் முற்பிறவியில் செய்த புண்ணியபலனால், அருந்தமனின் மகனாப்பிறந்து, அளகைக்கு அரசனானான். அசுரகுருவான சுக்கிரன், அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான். எனவே, இங்கு சிவனை வேண்டி தன்னை காக்கும்படி வேண்டினான் குபேரன். சிவன், அவனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்கினார். இத்தலத்தில் சிவன், பெரிய லிங்கவடிவில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். காஞ்சி காமாட்சி அம்மனே சிவனுக்குரிய அம்பாள் என்பதால், இங்கு அம்பாளுக்கு சன்னதி இல்லை. விநாயகர் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்பதால் சுவாமி, “அநேகதங்காவதேஸ்வரர்’ எனப்படுகிறார். விநாயகருக்கு அநேகதங்காவதர் என்றும் பெயர் உண்டு.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா, திருக்கார்த்திகை.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top