அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளுகுடி
முகவரி
அருள்மிகு அகத்தீசுவரர் கோயில், கிள்ளுகுடி – அஞ்சல் – 611 109, தேவூர் (வழி), கீவளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
இறைவன்
இறைவன்: அகத்தீசுவரர், இறைவி: சிவகாமசுந்தரி
அறிமுகம்
கீவளூர் (கீழ்வேளூர்) கச்சினம் சாலையில் – கிள்ளுக்குடி ஊர் உள்ளது. கடைவீதியில் கேட்டறிந்து – இடப்புறமாகத் திரும்பி சிறிது தூரத்தில் சாலை பிரியும் இடத்தில் – இடப்புறமாகத் திரும்பிச் சென்றால் ஊர்க்கோடியில் கோயில் உள்ளது. கார், வேன் கோயில் வரை செல்லும். தனிப் பேருந்தில் வருவோர் ஊர்க்கோடியில் சற்று முன்பாகவே நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும்.
புராண முக்கியத்துவம்
சிறிய கோயிலாக உள்ளது. மூலவர் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர் ஆகியோர் திறந்த வெளியில் காணப்படுகின்றனர். சிறிய கோயில் முழுவதும் பழுந்தடைந்து விட்டது. மரங்கள் வேர்விட்டு, கட்டிடத்தையே விரிசல் அடைய செய்துள்ளது. எவ்விதப் பாதுகாப்பும் இல்லை. கோயில் முன் பகுதி இடிந்து திறந்த வெளியாகவே உள்ளது. கருவறையே மரங்களால் பிளவுப்பட்டுள்ளது. மேற்கு பார்த்த சன்னதி. உள்ளே சிவலிங்கம் மட்டும் தான் உள்ளது. மக்கள் இக்கோயிலை எட்டிப் பார்ப்பதாகவே தெரியவில்லை. விவரம் சொல்லக் கூட ஆளில்லை – யாருக்கும் தெரியவுமில்லை. முழுவதும் சிதலமான இக்கோயிலை முழுவதும் புதுப்பித்தாலன்றி, இக்கோயில் நாளடைவில் இல்லாமற் போய்விடும். இத்தலம் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்பு தலமாகும்.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கச்சினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி