அரியலூர் ஆஞ்சநேயர் சிலை 11 ஆண்டுகளுக்கு பின் மீட்பு..
திருச்சி: அரியலுார் அருகே, வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து
திருடப்பட்ட ஆசநேயர் சிலை, 11 ஆண்டுகளுக்கு பின், ஆதிரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அரியலுார் மாவட்டம், செந்துறை அருகே, பொட்டவெளி
வெள்ளூர் கிராமத்தில், வரதரா ஜபெருமாள் உடனுறை ஸ்ரீதேவி, பூதேவி கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதே வி மற்றும் ஆசநேயர் உலோக சி லைகள் திருட்டுப் போனதாக, 2012ல் செந்துறை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் இந்த வழக்கை விசாரித்த, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அரியலுாரில் திருடப்பட்ட நான்கு சிலை களுள் ஒன்றான ஆசநேயர் சிலை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள
‘கிறிடி’ அருகாட்சியகத்தில் ஏலம் விடப்பட்டதை அறிந்தனர். போலீசார் மேற்கொ ண்ட நடவடிக்கை களை அடுத்து, அந்த சிலை யைவாகிய ஆதிரேலிய நபர், இந்திய துாதரகத்தில் ஒப்படைத்தார். பின் அது, இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. விரைவில் அந்த சிலை , கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. அரிலுாரில் திருட்டுப் போன ஆசநேயர் சிலையை, 11 ஆண்டுகளுக்குப் பின் மீட்ட சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரை , டி.ஜி .பி ., சை லேந்திரபாபு பாராட்டினார்.