அரிச்சந்திரபுரம் மயூரநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
அரிச்சந்திரபுரம் மயூரநாதர் சிவன்கோயில்,
அரிச்சந்திரபுரம், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610206.
இறைவன்:
மயூரநாதர்
இறைவி:
மங்களாம்பிகை
அறிமுகம்:
கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் தாண்டியதும் அடுத்த நிறுத்தம் இந்த அரிச்சந்திரபுரம். சாலையை ஒட்டி ஊர் உள்ளது, ஆனால் கோயில் ஊரின் வடகிழக்கில் சற்று தள்ளி உள்ளது. பெரியதொரு குளத்தின் மேல் கரையில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது சிவாலயம். சந்திரன் வழிபட்ட தலம் எனப்படுகிறது. மயூரம் எனப்படும் மயில் வழிபட்டதால் இங்கு இறைவன் பெயர் மயூரநாதர் இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர். ஓர் உயர்ந்த மண்டபம் இறைவன் சன்னதி முன்னர் உள்ளது அதன் வெளியில் நந்தி மண்டபம் அமைந்துள்ளது.
பிரகாரத்தில் விநாயகர் சிற்றாலயம் ஒன்றும் வடமேற்கில் பெரிய அழகிய முருகனின் ஆலயமும் அமைந்துள்ளது. அதில் ஒரு லிங்கமும் உள்ளது, பழம் கோயிலின் பிரகார லிங்கமாகலாம். வழமையான இடத்தில் சண்டேசர் உள்ளார். இறைவன் – மயூரநாதர் இறைவி – மங்களாம்பிகை இப்போது நாம் காணும் கோயில் சமீப வருடங்களில் கட்டப்பெற்ற புதிய ஆலயமாக இருக்க வேண்டும், கோயிலின் வெளியில் இரு லிங்க மூர்த்திகளும், ஒரு சிதைவுற்ற முருகன் சிலையும் உள்ளன.
காலம்
300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அரிச்சந்திரபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி