அய்ஹோல் சப்பர் குடி கோவில், கர்நாடகா
முகவரி
அய்ஹோல் சப்பர் குடி கோவில், அய்ஹோல் கோவில் வளாகம், அய்ஹோல், கர்நாடகா – 587124
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சப்பர் குடி என்பது இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள வரலாற்று நகரமான அய்ஹோலின் மையத்தில் மலபிரபா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். 8 ஆம் நூற்றாண்டில் சாளுக்கியர்களால் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோயில் துர்க்கை கோயிலுக்குப் பின்னால் அமைந்துள்ளது. இக்கோயில் மத்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயில் நுழைவு மண்டபம் மற்றும் கருவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மண்டபத்தின் தெற்குப் பகுதியில் மற்றொரு நுழைவு மண்டபம் உள்ளது. நுழைவாயில் தாழ்வாரத்தின் சாய்வான கூரை ஓலை கூரை வீட்டை ஒத்திருக்கிறது. எனவே, இக்கோயில் சப்பர் குடி (சப்பரா என்றால் ஓலைக் கூரை) என்று அழைக்கப்பட்டது. அய்ஹோல், பட்டடகல் முதல் அமீங்கத் வழித்தடத்தில் அமைந்துள்ளது.
காலம்
8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அய்ஹோல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாகல்கோட்
அருகிலுள்ள விமான நிலையம்
ஹூப்ளி