Saturday Jan 18, 2025

அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரசுவாமி திருக்கோவில், திருப்பூர்

முகவரி :

அருள்மிகு ஐராவதீஸ்வர சுவாமி திருக்கோவில்,

அபிஷேகபுரம், மேற்குப்பதி அஞ்சல் குன்னத்தூர் வழி,

திருப்பூர் மாவட்ட ம் – 638 103.

போன்: +91 99947 10322, 95665 – 01312

இறைவன்:

ஐராவதீஸ்வர சுவாமி

இறைவி:

அபிஷேகவல்லி

அறிமுகம்:

அபிஷேகபுரம் ஐராவதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், அபிஷேகபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயிலில் ஐராவதீஸ்வரர், அபிசேகவல்லி சன்னதிகளும், பெருமாள், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், காலபைரவர், நவக்கிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

 ஒரு சமயம் வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்திரனின் வாகனமான ஐராவதத்தால் அங்கிருந்த முனிவரின் தவம்       கலைந்துபோனது வெகுண்டெழுந்த முனிவர் யானையை பூனையாக மாற சாபமிட்டு, மீண்டும் தவத்தில் ஆழ்ந்துபோனார். நடந்த விவரத்தை நாரதர் மூலம் அறிந்து வருந்திய இந்திரன், பூனையாக உருவமாறிய ஐராவதம் பழையபடி யானையாக மாற, பாவ விமோசனம் கேட்டு அன்னை உமாமகேஸ்வரியை வணங்கினார். அபிஷேகபுரத்தில் ஒரு மண்டலம் தங்கியிருந்து தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன் இறைவனை நன்னீராட்டி ஆராதித்து வர, பழைய உருவை ஐராவதம் அடையும், என்று அம்பாள் கூற, ஐராவதம் அதன்படியே செய்து தனது பழைய உருவை அடைந்தது என்பது தலவரலாறு.

நம்பிக்கைகள்:

 இங்கு அருட்காட்சி தரும் ஈசனையும் அம்பிகையையும் வேண்டினால் சகல பிணிகளும் தீரும்; சர்வ மங்களங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேலும் கால சர்ப்ப தோஷத்தால் பாதிப்புகுள்ளானவர்களும் வணங்கி நற்பேறு அடைந்திருக்கிறார்கள். வாரிசு இல்லாத தம்பதியர் இத்தலம் வந்து வில்வ மாலையை ஐராவதேஸ்வரருக்கு அணிவித்து வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்:

 இங்கு அருட்காட்சி தரும் ஈசனையும் அம்பிகையையும் வேண்டினால் சகல பிணிகளும் தீரும்; சர்வ மங்களங்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேலும் கால சர்ப்ப தோஷத்தால் பாதிப்புகுள்ளானவர்களும் வணங்கி நற்பேறு அடைந்திருக்கிறார்கள். வாரிசு இல்லாத தம்பதியர் இத்தலம் வந்து வில்வ மாலையை ஐராவதேஸ்வரருக்கு அணிவித்து வேண்டி குழந்தை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள்.

திருவிழாக்கள்:

பிரதோஷ பூஜை, ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம், கார்த்திகை, சிவராத்திரி மற்றும் சிவனுக்கு உகந்த தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

காலம்

13 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அபிஷேகபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Location on Map

p>

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top