Tuesday Jul 02, 2024

அன்பில் சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி

அருள்மிகு சத்யவாகீஸ்வரர் திருக்கோவில் அன்பில் அஞ்சல் லால்குடி வட்டம் திருச்சி மாவட்டம் PIN – 621702 PH:04312-544927

இறைவன்

இறைவன்: சத்தியவாகீஸ்வரர் றைவி செளந்திரநாயகி

அறிமுகம்

அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என இருவராலும் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை போன்ற புராண பெயர்களை உடையது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 57வது தலம் ஆகும். அன்பிலாந்துறை (அன்பில் ஆலாந்துறை) அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இக்கோயியில் உள்ள இறைவன் சத்தியவாகீஸ்வரர், இறைவி சவுந்திரநாயகி. சத்திய லோகத்து பிரமனும் வாகீசரும் பூசித்த காரணத்தால் சத்திய வாகீசர் என்று பெயர் பெற்றுமிருக்கிறார் எனப்படுகிறது. இத்தலத்தில் காயத்திரி தீர்த்தம் என்ற தீர்த்தமும், தலமரமாக ஆலமரமும் உள்ளது.

புராண முக்கியத்துவம்

இக்கோயில் அற நிலையத்துறைக்கு உட்பட்டிருந்தா லும் கூட, பாழ்பட்டுப் போனதால் தல வரலாறு தெளிவாக கிடைக்க வில்லை. மூலவர் சத்யவாகீஸ்வரர். இவர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்துள்ளார். பிரம்மன் வழிபட்ட மூர்த்தம் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாம மும் இவருக்கு உண்டு. அம்பாள் சவுந்தரநாயகி. ஊர் பெயர் அன்பில் கோயிலின் பெயர் ஆலந்துறை. இரண்டும் சேர்த்து அன்பிலாந்துறை ஆனது. பிரம்மா, வாகீச முனிவர் பூஜை செய்த தலம்.

நம்பிக்கைகள்

காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்

இக்கோயிலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் செவிசாய்த்த விநாயகர் மட்டுமே. சீர்காழியில் பிறந்து, உமையம்மை யிடம் பால் குடித்து, தேன் சுவை பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் சிவத்தலங்கள் பலவற்றிற்கு வந்தார். சிவனுக்கு இவரைச் சோதிக்க ஆசை. காவிரியில் தண்ணீர்ணீ கரை புரண் டோடச் செய்தார். ஞானசம்பந்தரால் கோயில் இருக்கும் இடத்தை அடைய முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக் கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓர ளவே கோயிலை எட்டியது. அங் கிருந்த சிவமைந்தர் மூத்த விநாயகர், “இளைய பிள்ளையார்’ எனப்பட்ட தன் சகோதரனுக்கு சமமான ஞானசம் பந்தனின் பாட்டைக் கேட்பதற்காக, தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார். அப்போது புன்முறுவல் முகத்தில் அரும்பியது. ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து ரசித்த அக்காட்சியை சிற்ப மாக வடித்தார் ஒரு சிற்பி. அச்சிலை இன்றும் எழிலுற இருக்கிறது. கோயி லில் ராஜகோபுரமும் இருக்கிறது.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அன்பில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top