அன்னுகுடிசிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
அன்னுகுடி சிவன்கோயில்,
அன்னுகுடி, மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லவேண்டும், வடபாதிமங்கலத்தில் இருந்து நேர் தெற்கில் ஒரு சாலை குலமாணிக்கம் செல்கிறது இதில் 2 கிமீ தூரம் சென்று வலதுபுறம் திரும்பி ½ கிமீ சென்றால் அன்னுகுடி எனும் ஊர் உள்ளது. இவ்வூர் குலமாணிக்கம் எனும் ஊராட்சியின் கீழ் வரும் ஊராகும்.
நீடாமங்கலம் அருகில் உள்ள முல்லைவாசல் சிவன் கோயிலில் காணப்படும் சோமாஸ்கந்தர் உருவத்தை கி.பி. 11ஆம் நூற்றாண்டளவில் குன்றனூர்கிழவன் குலமாணிக்கம் செய்தளித்துள்ளான். இதனை இச்செப்புத் திருமேனியின் பீடத்திலுள் பொறிக்கப்பட்டுள்ளது. இவரது பெயரில் உருவான ஊராதலால் இந்த ஊருக்கு குலமாணிக்கம் பெயர் வந்திருக்கலாம்.
இந்த அன்னுகுடியில் ஒரு பழமையான சிவன்கோயில் ஒன்றிருந்து அழிந்துபட்டது. இதிலிருந்த லிங்கம் மற்றும் விநாயகர் திருமேனிகள் மட்டும் கிடைக்கப்பெற்று ஒரு கீற்று கொட்டகையில் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தன. பின்னர் ஊர் மக்களின் பெருமுயற்சியில் இறைவன் இறைவிக்கு பெரிய கருவறைகளும், பிற பரிவாரங்களுக்கு சிற்றாலயங்களும் உருவாகி முதன்மைவண்ணம் பூசும் அளவிற்கு கோயில் எழும்பிவிட்டது. பிற சன்னதிக்குரிய தெய்வங்களும் உருவாக்கப்பட்டு தயாராக உள்ளன. நிறைவுப்பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இறைவன் இறைவி பெயர் அறியக்கூடவில்லை.
திருப்பணி தொடர்பாக பேச திருமதி.பத்மா அவர்களை 95856 99002 ல் அழைக்கலாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அன்னுகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி