Saturday Nov 23, 2024

அத்தாளநல்லூர் மூன்றீசுவரர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு மூன்றீசுவரர் திருக்கோயில்,

அத்தாளநல்லூர்,

திருநெல்வேலி மாவட்டம். 

இறைவன்:

மூன்றீசுவரர்

இறைவி:

மரகதாம்பிகை

அறிமுகம்:

 திருநெல்வேலி – தென்காசி சாலையில், திருநெல்வேலியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிலும்; அம்பாசமுத்திரத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் அத்தாள நல்லூர் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தைக் காணமுப்பத்துத் முக்கோடி தேவர்களும் கைலாயம் வந்தனர். இதனால் பூமியின் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. இதை சரிசெய்ய சிவபெருமான் அகத்தியரை தென்பகுதிக்கு அனுப்பினார். அகத்தியரும் சிவனின் உத்தரவுப்படி தென்பகுதிக்கு வந்து பொதிகை மலையில் தங்கி சிவபூஜை செய்தார். இவருக்குப் பின் இந்த பொதியமலைக்கு பல சித்தர்கள் வந்தனர். அவர்கள் அகத்தியர் பூஜை செய்த சிவனை தரிசித்த பின் இந்தப் பகுதியில் உள்ள இந்த சிவாலயத்தில் தாங்களும் சிவபூஜை செய்தனர். இதனால் இக்கோயில் சித்தர்களின் பீடமாக கருதப்படுகிறது.

நம்பிக்கைகள்:

பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இங்குள்ள சுவாமியை வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

இங்குள்ள தட்சிணாமூர்த்தி வலது காலைத் தொங்கவிட்டு, வலது முட்டியின் மீது இடது பாதம் முழுமையாக மேல் நோக்கி இருக்குமாறு அபூர்வமாக அமர்ந்துள்ளார். மேற்குப் பிராகாரத்தில் அடுத்தடுத்து மூன்று சிறிய சன்னதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய சிவலிங்கத் திருமேனியும், அதற்கு முன்பாக ஒரு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மூன்று ஈசகர்ள் எழுந்தருளியிருப்பதால் கருவறை மூலநாயகருக்கு மூன்றீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. இவர் கிழக்கு நோக்கி லிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார்.

கோயில் மண்டபங்களின் கொடுங்கைகள் ஒன்றில் மயிலுடன் கூடிய சுப்பிரமணியருக்கு அர்ச்சகர் அடுக்கு தீபாராதனை காட்டுவது போன்றும்; கொடிமரம், நந்தி, பலிபீடம், இரண்டு பக்தர்கள் ஆகியோர் அடங்கிய தொகுப்புச் சிற்பம் ஒன்றும் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது. இன்னொரு மண்டபக் கொடுங்கையின் மேற்புறம் சிவலிங்கம், தேவி, தீபாராதனை காட்டும் அர்ச்சகர், கொடிமரம், நந்தி, பலிபீடம், இரண்டு பக்தர் சிலைகளையும் கண்டு வியக்கலாம். கருவறையின் மேல்புறத்தில் உள்ள அகலமான விமானத்தின் பீடத்தில் யாளி வரிகளும், பூதவரிகளும் உள்ளன. முன் மண்டபம், மகா மண்டபம் மற்றும் திருச்சுற்றிலும் கை கூப்பிய நிலையில் பல்வேறு அரசர்கள், தனவந்தர்கள் சிலைகளைக் காணமுடிகிறது.

திருவிழாக்கள்:

சிவராத்திரி, பிரதோஷம்

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அத்தாளநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அம்பாசமுத்திரம், திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top