அண்ணலக்ரஹாரம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்
முகவரி
அண்ணலக்ரஹாரம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 001.
இறைவன்
இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: மீனாட்சி
அறிமுகம்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், அண்ணலக்ரஹாரம் சிவன்கோயில் கும்பகோணத்தை ஒட்டியே அமைந்துள்ளது இந்த அண்ணலக்ரஹாரம் மகாமககுளத்தின் தென்கரை வழியில் அரசு பெண்கள் கல்லூரியை தாண்டினால் அரசலாறு பாலத்தின் வழியாக சென்றால் அண்ணலக்ரஹாரம் உள்ளது. அன்னபூரணியின் அருளைப்பெற அற்புதமான வழி ஒன்று உண்டு. ஆம், அன்னதானம் செய்வதன் மூலம் நமக்கு எப்போதும் அன்னபூரணியின் திருவருள் கிடைக்கும். ஆனால், `கடனே’ என்று அன்னதானம் செய்யக்கூடாது. சிவனே என்று செய்யவேண்டும். அன்னதானசிவன் செய்ததுபோல் ஆத்மார்த்தமாக அன்னதானம் செய்யவேண்டும்.
புராண முக்கியத்துவம்
யார் அந்த அன்னதான சிவன்? கும்பகோணத்தை அடுத்துள்ள தேப்பெருமா நல்லூர் என்ற ஊரில் 1850ல் பிறந்தவர் அன்னதான சிவன். அவருடைய இயற்பெயர் ராமசாமி சிறு வயதிலேயே பக்திக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். பிற்காலத்தில், தம் சொத்துகளை விற்றும், மற்றவர்களிடம் நன்கொடை பெற்றும் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு அன்னதானம் செய்தவர். இதன் காரணமாகவே அவருக்கு அன்னதானசிவன் என்ற பெயர் வந்தது. 1909-ம் வருடம் நடைபெற்ற கும்பகோணம் மகாமக விழாவின்போது, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அன்னதான சிவன் அன்னதானம் வழங்கினார். அந்த உன்னதப் பணியை காஞ்சி பெரியவர் வெகுவாக பாராட்டவும் செய்தார். பிற்காலத்தில் கும்பகோணத்தை அடுத்துள்ள அரியதிடல் அண்ணலக்ரஹாரம் என்ற பகுதியில் மடம் அமைத்து தங்கி பணிகளை தொடர்ந்தார் அன்னதான சிவன். இந்த ஊரில் முற்காலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்திருந்தது. இந்தக் கோயிலுக்கு அருகில்தான் அன்னதானசிவன் ஒரு மடம் அமைத்துக்கொண்டு, தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டதுடன், அன்னதானமும் செய்து வந்தார். இதனால் இந்த ஆலயத்தில் வீற்றிருந்த அன்னை மீனாட்சி, ஒருமுறை அவருக்கு அன்னபூரணியாக காட்சி கொடுத்த தலம். அவருடைய மறைவுக்குப் பிறகு ரமணரின் சீடர்களில் ஒருவரான சுவாமி சதானந்தர் என்பவர், மடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அன்னதானம் செய்து வந்தார். பின்னர், கோயிலும் அன்னதானசிவன் மடமும் சிதிலமடைந்துவிட்டன. சுவாமி, அம்மன் சிலைகள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. 2007-ம் வருடம், மடத்துக்குப் பக்கத்திலிருந்த ருத்ரமாகாளியம்மன் கோயில் கட்டும்போது அன்னதானமடத்துக்குப் பக்கத்தில் மண்ணுக்குள் மறைந்திருந்த சிவலிங்கத்தையும், அம்மன் சிலையையும் வெளியில் எடுத்து ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் வந்து பூஜை செய்ததுடன் கோயில் திருப்பணிகளை தொடங்கிவைத்தார். தற்போது பணிகள் முடிவடைந்து குடமுழுக்கும் நடந்தேறிவிட்டது. மேற்கு நோக்கிய இறைவனாக சுந்தரேஸ்வரர் பெயருக்கேற்ற சுந்தர வடிவம் கொண்டுள்ளார். இறைவி மீனாட்சி தெற்கு நோக்கியுள்ளார்.இறைவன் எதிரில் நந்தி மண்டபம் உள்ளது, தென்மேற்கில் விநாயகர் சிற்றாலயமும் வடமேற்கில் முருகன் மகாலட்சுமி சன்னதியும் உள்ளது, சண்டேஸ்வரர் சன்னதி உள்ளது, கருவறை கோட்டத்தில் தென்முகன் துர்க்கை உள்ளனர், கோயில் தற்போது பூச்செடிகள் வைத்தும் பராமரிக்கப்பட்டு அழகுடன் உள்ளது. இங்குள்ள இறைவனை வழிபட்டால் பசிப்பிணியே அணுகாது என்பது ஐதீகம், இறையருளோடு மகான் அன்னதானசிவனின் ஆசியும் சேர்ந்தே கிடைக்கும். அன்னதானம் என்பது பொதுவில் சக மனிதர்களுக்கு உணவிடுதல் என்றே பலரும் எடுத்துக்கொள்கின்றனர், ஆனால் ஐவகை உயிர்களுக்கும் உணவிடுதல் தான் சிறந்த அன்னதானம் ஆகும்., நித்தம் அன்னதானம் செய்து கர்மாவை குறைப்போம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
நம்பிக்கைகள்
இங்குள்ள இறைவனை வழிபட்டால் பசிப்பிணியே அணுகாது என்பது ஐதீகம், இறையருளோடு மகான் அன்னதானசிவனின் ஆசியும் சேர்ந்தே கிடைக்கும்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி