அடியக்கமங்கலம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
அடியக்கமங்கலம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில்,
அடியக்கமங்கலம், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 611101.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
அடியக்கமங்கலம்; இவ்வூர். முதலாம் இராசராசசோழனது ஆட்சிக் காலத்தில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அடியப்பிமங்கலம் என்றும், அடியப்பியச் சதுர்வேதி மங்கலம் என்றும் வழங்கியிருக்கிறது, இவ்வூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் சபை சிறப்பாகச் செயல்பட்டதென்பதனையும் கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இவ்வூர் கீவளூர் சாலையில் உள்ள சிறிய நகரம், இங்கு மூன்று சிவன் கோயில்கள் உள்ளன. மூன்று கோயில்களில் இரு கோயில்களுக்கு காசி விஸ்வநாதர் எனவும் ஒரு கோயில் அசுபதீஸ்வரர் எனவும் வழங்கப்பட்டு வருகிறது. ஊர் பெரும்பகுதி பிற மதத்தவர் குடியிருப்பாகிவிட்டது. இதில் அசுபதீஸ்வரர் கோயில் அவர்களது குடியிருப்பின் நடுவிலும் மற்ற இரு கோயில்கள் பிரதான சாலையில் உள்ளது.
இக்கோயில் பிரதான சாலையில் இடதுபுறம் அமைந்துள்ளது. இக்கோயில் கிழக்கு நோக்கியது எனினும் சாலை தென்புறம் உள்ளதால் தென்புறம் கோபுரவாயில் உள்ளது. சாலை மட்டம் உயர்ந்துவிட்டதால் சற்று கீழிறங்கி முன்று நிலை கோபுரம் வழி உள்ளே செல்லவேண்டும். இறைவன் கிழக்கு நோக்கிய காசி விஸ்வநாதர் இறைவி தெற்கு நோக்கிய காசி விசாலாட்சி. இறைவன் சிறிய லிங்க மூர்த்தியாக உள்ளார், இறைவியும் சற்று சிறிய அளவிலேயே உள்ளார். நேர் எதிரில் தனி மண்டபத்தில் நந்தி உள்ளார். பிரகார கோயில்களாக அச்சம் தீர்த்த விநாயகர் அடுத்து கஜலட்சுமி அடுத்து வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார்.
சமீபத்தில்தான் கோயில் குடமுழுக்கு கண்டுள்ளது, திருக்கோயில் காலை மதியம் மாலை என முறையாக பூஜை நடக்கிறது, தூய்மை பணிக்கு ஒரு மூதாட்டியும், நல்லதொரு அர்ச்சகரும் இறைவனுக்கு கிடைத்திருக்கிறார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அடியக்கமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி