அடிப்புதுச்சேரி மதங்கேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
அடிப்புதுச்சேரி மதங்கேஸ்வரர் சிவன்கோயில்,
அடிப்புதுச்சேரி, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610001.
இறைவன்:
மதங்கேஸ்வரர்
இறைவி:
லோகநாயகி
அறிமுகம்:
திருவாரூர் பெரியகோயிலின் தேரோடும் வீதியின் வடகிழக்கில் செல்லும் கேக்கரை வழி ஆறு கிமி சென்றால் அடிப்புதுச்சேரி அடையலாம். அடியக்கமங்கலம் வழியாகவும் செல்லலாம். ஆனால் ஒரு ஒன்றரைஅடி பாலம் வழியாக ஒடம்போக்கி ஆற்றை கடக்கும் நிலைவரும். பல வருடகாலமாக பூசையின்ற போவோரின்றி கோயில் பகுதி காடு போல ஆகியுள்ளது. சுற்று சுவர்கள் இடிந்து கிடக்கின்றன. நுழைவாயில் தான் மீதமிருக்கிறது. பிரகார சிற்றாலயங்கள் புதருக்குள் இருக்கின்றன. அதில் மூர்த்திகள் ஏதுமில்லை. இறைவன் கருவறை இடிபாடுகள் தாங்கி நிற்கிறது, முகப்பில் ஒரு மண்டபம் உள்ளது அதன் வெளியில் நந்தி மண்டபம் அதில் ஒரு ஆடு படுத்து கிடக்கிறது. பிரகாரத்தில் விநாயகர் முருகன் சண்டேசர் சிற்றாலயங்கள் இனி மீட்டெடுக்க இயலாத நிலையில் உள்ளன. அம்பிகையின் சன்னதி தனித்து தெற்கு நோக்கி உள்ளது. கோயிலில் இருந்த இறை மூர்த்தங்கள் தனி அறை ஒன்று கட்டப்பட்டு அதில் வைக்கப்பட்டுள்ளன. கோயிலின் எதிரில் ஒரு பெரிய குளம் பராமரிப்பின்றி உள்ளது.
புராண முக்கியத்துவம் :
ஒரு காலத்தில் பிரம்மதேவன் யானை வடிவில் சிவனை குறித்து தவம் செய்து கொடிருந்தார் அப்போது பிரம்மனின் மனதில் இருந்து ஒரு மகன் தோன்றினார் அவரே மதங்கர், மதங்கம் என்றால் யானை. பிரம்மன் மதங்கரிடம் சிவனை நோக்கி தவம் செய்ய சொல்கிறார். மன்மதன் அவரது தவத்தை கலைக்கிறான், நீ சிவனது நெற்றி கண்ணால் அழிவாய் என சபிக்கிறார் மதங்கரின் தவத்தால் மகிழ்ந்த சிவன் காட்சி தருகிறார். தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என வேண்டுகிறார் அவ்வண்ணமே ஆடி வெள்ளி அன்று மதங்க தீர்த்தத்தில் நீலோத்பல மலரில் சியாமளாவாக அவதரிக்கிறார் தேவி. இவ்வாறு புகழ் பெற்ற மதங்கர் வழிபட்ட லிங்கம் தான் இந்த ஊரில் ஒடம்போக்கி ஆற்றின் கரையில் உள்ள மதங்கேஸ்வரர் ஆடி புத்ரி என தேவியின் பெயரில் வழங்கப்பட்ட ஊர் தான் பின்னர் மருவி அடிப்புதுச்சேரி ஆனது. இங்குள்ள இறைவன் பெயர் மதங்கேஸ்வரர் இறைவி- லோகநாயகி.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அடிப்புதுச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி