அச்சுதமங்கலம் மகிழபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
அச்சுதமங்கலம் மகிழபுரீஸ்வரர் திருக்கோயில்,
அச்சுதமங்கலம், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610105.
இறைவன்:
மகிழபுரீஸ்வரர்
அறிமுகம்:
திருவாரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற புண்ணிய தலமான திருவாஞ்சியம், அருகில் ஒன்றரை கி.மீ. தெற்கில் உள்ளது அச்சுதமங்கலம். அர்ஜுனம் என்றால் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பது என பொருள் உண்டு, இத்தலம் களங்கமற்ற உன்னத தலமாதலால் அர்ஜுனமங்கலம் என அழைக்கப்பட்டு அச்சுதமங்கலம் ஆனது. பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் உருவாக்கிய நகரம் என்பதால் அர்ச்சுன மங்கலம் என அழைக்கப்பட்டு அச்சுதமங்கலம் ஆனது என்போரும் உண்டு. ஐவருக்கும் இங்கு ஐந்து கோயில்கள் இருந்ததாக கூறுகின்றனர். தர்மேஸ்வரர் • காசிவிஸ்வநாதர் • சோமநாதர் நான்காவது திருக்கோயில் தான் தென் புறத்தில் இருக்கும் இந்த மகிழபுரீஸ்வரர்.
திருவாஞ்சியத்தில் இருந்து அச்சுதமங்கலத்தில் சேருமிடத்தில் தான் இந்த சிறிய சிவாலயம் உள்ளது. சாலையின் வலதுபுறம் மேற்கு நோக்கிய கோயிலாக உள்ளது, கோயில் வழிபாடின்றி பாழடைந்து விட்டதால் சன்னதிக்குள் இறை திருமேனிகள் ஏதுமில்லை, இறைவன் மேற்கு நோக்கிய சன்னதி கொண்டிருந்திருக்கிறார், அம்பிகை தென்முகன் கொண்டவர். அச்சுதமங்கலம் மக்கள் நூற்றுக்கணக்கானோர் தினந்தோறும் வந்து செல்லும் பிரதான சாலையில் உள்ள இக்கோயில் மூலவர் திருமேனிகள் என்னவாயிற்று? பரிவார தெய்வங்கள் என்னவாயிற்று? எத்தனை ஆண்டுகாலமாக இப்படி கிடக்கிறது? ஏன் இதனை திருப்பணி காணாமல் வைத்திருக்கின்றனர்?
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அச்சுதமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நன்னிலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி