ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் (விருச்சிக ராசி) திருக்கோயில், பெரம்பலூர்
முகவரி
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சன்னதி தெரு, செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு-621104. தொலைபேசி: +91 – 4328 268 008 மொபைல்: +91 – 94878 88072 / 99441 17450 / 98426 99378
இறைவன்
இறைவன்: ஏகாம்பரேஸ்வரர் இறைவி: காமாட்சி
அறிமுகம்
தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கி.பி.907 முதல் கி.பி.955 வரை ஆண்ட பராந்தக சோழனால் கட்டப்பட்ட பழமையான கோவில் இது. மூலஸ்தான தெய்வங்கள் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் மற்றும் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள். செல்வத்தின் திருவருளை தனது மீன் வாகனத்தில் காட்டும் குபேர சிற்பத்திற்கு இக்கோயில் பிரசித்தி பெற்றது. கோவிலில் 12 ராசிகளை குறிக்கும் 12 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. செல்வச் செழிப்பிற்காக குபேரனை வழிபட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இக்கோயில் விருச்சிக ராசிக்கு பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
முன்னொறு காலத்தில் கடம்ப வனமாக இந்த ஊர் இருந்திருக்கிறது. வணிகன் ஒருவன் இக்கடம்பவனத்தில் இரவு நேரத்தில் தங்க நேர்ந்தது. அப்போது நள்ளிரவில் திடீரென்று அவன் கண்ணெதிரில் ஓர் ஒளி மிகுந்த தீப்பிழம்பும் அத்தீம்பிழம்பின் நடுவே ஒர் சிவலிங்கமும் தோன்றி தேவர்களும் முனிவர்களும் வழிபடுகின்ற காட்சி பளிச்சென்று தோன்றி மறைந்தது. இந்த காட்சியைக் கண்ட வணிகன் மயிர்கூச்செறிந்து சோழமன்னனிடம் தெரிவித்தான். சோழனின் அரண்மனையில் விருந்தினராய் தங்கியிருந்த குலசேகர பாண்டியன் இதை கேள்வியுற்று பாண்டியனும் சோழனும் அந்த இடத்தை சென்றடைந்தனர். அப்போது கையில் செங்கரும்பு ஒன்றினை ஊன்றிக்கொண்டு முதியவர் ஒருவர் தடுமாறிக் கொண்டு அவ்விடத்தின் வழியாக வந்தவர் மாமன்னர்களை அணுகி சிவலிங்க இருப்பிடத்தைக் காட்டி திடீரென ஜோதி வடிவாக மறைந்தார். அந்த ஜோதி மறைந்த கிழக்கு திசை நோக்கி பார்த்தபோது அங்கு குன்றின் மீது முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக காட்சி தந்தான். பக்தி பரவசத்தில் ஆழ்ந்த சோழனும் பாண்டியனும் ஏக ஜோதியின் இடையில் தோன்றிய ஏகாம்பரேசுவரருக்கு ஓர் ஆலயமும் கிழக்கு குன்றின் மீது தோன்றிய தண்டாயுதபாணி சுவாமிக்கு அம்மலைமீது ஓர் ஆலயம் கட்டினார்கள் என தல வரலாறு கூறுகிறது. ராசி குபேரர்: சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களுடன் அமைந்த கோயில் இது. கோயிலில் உள்ள தூண்களில் பன்னிரு ராசிகளுக்கும் உரிய குபேரர் உள்ளனர். குபேரனுக்குரிய வாகனம் மீன். எனவே, இங்குள்ள ஒவ்வொரு குபேரரும் மீன் மீது, ஒவ்வொரு கோலத்தில் காட்சி தருகின்றனர். ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்பாள் சன்னதி முன் மண்டப தூண்கள் மற்றும் சிவன் சன்னதி கோஷ்டத்தில் இவர்களைத் தரிசிக்கலாம். தவிர, ராஜ கோபுரத்தில் மகாகுபேரர் இருக்கிறார். இவ்வாறு, ஒரே கோயிலில் 12 குபேரர்களை தரிசனம் செய்வது மிகவும் அரிது. தீபாவளியை ஒட்டி வரும் அமாவாசை, அட்சய திரிதியையன்று 12 குபேரர்களுக்கும் விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். குடும்பத்தில் செல்வம் பெருக, கடன் பிரச்னைகள் தீர தினமும் சுக்கிர ஓரை நேரத்திலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்கள் ராசிக்குரிய குபேரனுக்கு பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
நம்பிக்கைகள்
இத்தலத்தில் உள்ள குபேர சிற்பத்தை வணங்குவோர்க்கு செல்வம் கொழிக்கும் வாழ்வு கிட்டும் என்பதால் பெருமளவில் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். இத்தலத்து ஈசனை வணங்குவோர்க்கு நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற்போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியன நீங்குவதால் இத்தலம் சிறப்பு பெற்று விளங்குகின்றது. இத்தலத்தில் வந்து வழிபடுவோர்க்கு மன அமைதி கிட்டும் என்பது முக்கியமான அம்சம்.
சிறப்பு அம்சங்கள்
ராசி எண் : 8 வகை : தண்ணீர் இறைவன்: செவ்வாய், ஆங்கில பெயர் : ஸ்கார்பியோ சமஸ்கிருத பெயர் : விருச்சிகம் அவர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்கள் தந்திரமானவர்கள். சில நண்பர்கள் மட்டுமே இருப்பார்கள். இந்த நபர்களுக்கு எதிர்பாராத மரபுகள் மற்றும் பரிசுகள் கிடைக்கக்கூடும்.
திருவிழாக்கள்
தைப்பூசம் – 10 நாட்கள் திருவிழா – பிரம்மோற்சவம். இதுவே இத்தலத்தின் பெருந்திருவிழா ஆகும். கொடி ஏற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து பத்து நாட்களுக்கு சிறப்பு அபிசேக அலங்காரத்துடன் சுவாமி திருவீதி வீ யுலா நடைபெறுகிறது. இதில் ஒன்பதாம் நாளன்று பஞ்சமூர்த்திகள் ஒரு தேரிலும் அம்பாள் ஒரு தேரிலும் ஆக இரண்டு தேர்களில் கொலுவீற்வீ றிருக்க செட்டிகுளம் ரத வீதி வீ களில் தேரோட்டம் விமரிசையாக நடைபெறுகிறது. ஆடிபூரம், விநாயகர் சதுர்த்தி நவராத்திரி விழா, சூரசம்காரம், தீபாவளி, திருக்கார்த்திகை, தனுர் மாதம், திருவாதிரை, சிவராத்திரி, சித்திர பவுர்ணமி ஆகியன இத்தலத்தில் விசேச நாட்களாகும். மாதாந்திர பிரதோச தினங்கள் இங்கு விசேசமாக நடைபெறுகிறது. வருடத்தின் விசேச நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள் ஆகியவற்றின் போது கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும். இந்த நாட்களில் கோயிலில் சுவாமி அம்பாளுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.
காலம்
கி.பி.907 முதல் கி.பி.955 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செட்டிக்குளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பெரம்பலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி