Thursday Dec 26, 2024

வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி

வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயில் – வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் சாலை, பூலுவம்பட்டி, கோயம்புத்தூர், தமிழ்நாடு 641114, தொடர்புக்கு: 0422 261 5258 / 230 0238

இறைவன்

இறைவன்: வெள்ளியங்கிரி ஆண்டவர் இறைவி: பார்வதி

அறிமுகம்

கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி, எனும் ஊரிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலையாகிய கயிலாயங்கிரியே சிவ சொரூபமாக தோற்றமளிக்கிறது. இங்கே உள்ள குகையில்தான் சிவபெருமான் திருக்காட்சி அருள்கிறார். இம்மலையின் மீது ஆண்களும், வயது (பருவம்) அடையா சிறுமிகளும், மூதாட்டிகளும் ஏறி வழிபடுகின்றனர். இங்கு ஆண்டி சுனையில் நீராடுவது ஒரு முக்கிய நிகழ்வாகும் மலை உச்சியில் பாறைகள் சூழ சிவபெருமான் காட்சியளிக்கின்றார். பெரும்பாலும் கோடை காலங்களில் இரவு பொழுதுகளிலேயே மலை ஏறி இறங்குகின்றனர். கையில் மூங்கில் கழிகள் உதவியுடன் ஏறுகிறார்கள்.

புராண முக்கியத்துவம்

சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம நி்லையி்ல் அமைந்துள்ளது. மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது. தட்சிண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். வெள்ளியங்கிரி, அகத்திய பரம்பரையில் வரும் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது. சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும்,சூட்சுமத்தில் இயங்கியும்வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது. மகாயோகி பழனி சுவாமிகள், சிவயோகியார், சத்குரு ஸ்ரீபிரம்மா, அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார், சௌந்திரபாண்டி சாமியார், காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டிகொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரிமுத்து முதலியார், இராமானந்த பரதேசி ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும். வெள்ளியங்கிரி மலை மீது மற்றும் மலை அடிவாரத்தில் இருக்கும் சிவன் கோவில்கள் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்களாக கருதப்படுகின்றன. இங்கிருக்கும் சிவபெருமான் “வெள்ளியங்கிரி ஆண்டவர்” என்றும் அம்பாள் “மனோன்மணி” என்றும் அழைக்கப்படுகிறார்கள். பன்னெடுங்காலமாக சித்தர்கள் விரும்பி வழிபடும் கோவிலாக இது இருந்திருக்கிறது. புராணங்களின் படி பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இப்பகுதிக்கு வந்த போது சிவபெருமான் வேடன் ரூபத்தில் தோன்றி, அர்ஜுனனுடன் விளையாட்டாக போர் புரிந்தார். இறுதியில் தனது உண்மை வடிவத்தில் தோன்றிய சிவபெருமானை வணங்கிய அர்ஜுனனுக்கு, தனது பாசுபத ஆயுதத்தை சிவபெருமான் அளித்து ஆசிர்வதித்தார். இங்கிருக்கும் ஏழு மலைகளும் உடலில் இருக்கும் “ஏழு யோக சக்கரங்களை” குறிப்பதாக கூறுகிறார்கள். இமய மலையில் இருக்கும் கயிலாய மலைக்கு யாத்திரை போக முடியாதவர்கள், “தென்கயிலாயம்” என போற்றப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையாத்திரை செய்வதால் கயிலாய மலைக்கு சென்ற பலனை அடைவார்கள் என சித்தர்கள் கூறியிருக்கின்றனர். இந்த மலையில் இருக்கும் ஆண்டி சுனை தென்கயிலாயத்தின் “மானசரோவர்” என்றழைக்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

வெள்ளியங்கிரியில் சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரர் மற்றும் சதாசிவனின் ஐந்து முகங்கள் பஞ்சகிரியாகவும், பஞ்சபூதங்களுக்குரிய பஞ்சலிங்கங்களாகவும் காணப்படுகின்றன. மலைத்தொடர்களில் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன, இதில் அரிய மூலிகைகள் அடங்கும். வெள்ளியங்கிரி மலைகள் கிரகத்தின் மிகவும் சக்திவாய்ந்த இடமாக கருதப்படுகிறது மற்றும் சிவபெருமானின் இருப்பிடத்திற்காக ஆன்மீக ரீதியாக போற்றப்படுகிறது. வெள்ளியங்கிரி மலையின் உச்சியில், சிவபெருமான் சுயம்பு லிங்கமாகப் பூஜிக்கப்படுகிறார். இந்தியாவில் புனித நூல்களின்படி மூன்று கைலாசங்கள் உள்ளன; முதல் கைலாசம் வட கைலாயம் வட துருவத்தில் கடலுக்கு நடுவே உள்ளது. இரண்டாவது கைலாசம்; மத்திய கயிலை இமயமலையில் உள்ளது. மூன்றாவது கைலாசம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலையில் உள்ளது. இக்கோயிலில் சிவ தரிசனம் செய்வது இமயமலையில் உள்ள சிவ தரிசனத்திற்கு சமம் என்று பல பக்தர்கள் நம்புகிறார்கள்.

திருவிழாக்கள்

மகாசிவராத்திரி

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வெள்ளியங்கரி மலை

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்பத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top