விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில், திருவள்ளுர்
முகவரி
விளக்கணாம்பூண்டி விசாலீஸ்வரர் கோயில், ஆர்.கே.பேட்டை அருகில், விளக்கணாம்பூண்டி, பள்ளிப்பட்டு, திருவள்ளுர் மாவட்டம் – 602 001.
இறைவன்
இறைவன்: விசாலீஸ்வரர் இறைவி: வாடாவல்லி
அறிமுகம்
சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள திருத்தணியில் இருந்து 20 கி.மீ தொலைவில் சோழிங்கர் செல்லும் வழியில் ஆர். கே பேட்டையில் அமைந்துள்ளது. விசாலீஸ்வரர் கோயில் என வழங்கப்படும் இச்சிவன் கோயில் முந்தைய சோழர்காலக் கட்டிடக் கலைப்பாணியில் அமைந்ததாகும். கருவறையின் மேலுள்ள விமானச்சிகரம் வேசர வகையில் வட்டமாக அமைந்துள்ளது. இக்கோயிலின் கருவறை புறச்சுவர் கோட்டங்களில் தட்சிணாரமூர்த்தி, பிரம்மா முற்றும் துர்க்கை ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் கருவறையில் முற்காலச் சோழர்களின் கலைப்பாணியில் அமைந்த விநாயகர், ஷப்தமாதர்கள் சிற்பங்கள் உள்ளன. கோயில் நுழைவாயிலுக்கு அருகில் இரண்டு வீரர்கள் தங்கள் தலையைக் கடவுளுக்கு அரிந்து அர்ப்பணிக்கும் நவகண்டச் சிற்பங்கள் உள்ளன. இங்கு அழகிய ஜேஷ்டாதேவி சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. இச்சிற்பங்கள் அணைத்தும் முற்காலச் சோழர்களுடையக் கலைப்பாணியில் அமைந்துள்ளது. நவகண்ட சிற்பத்தின் அருகாமையிலேயே தமிழ் கல்வெட்டு ஒன்று பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. கருவறைத் தூண்களில் தமிழ் கல்வெடடுகள் காணப்படுகின்றன. இதில. சோழர் காலத்தைச் சார்ந்த இரண்டு தமிழ் கல்வெட்டுகளும், விஜயகண்டகோபாலனின் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இக்கோவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விளக்கணாம்பூண்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சோளிங்கர், திருத்தணி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை