Thursday Dec 26, 2024

விற்குடி மயானேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

விற்குடி மயானேஸ்வரர் திருக்கோயில்,

விற்குடி, நாகை வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 610101.

இறைவன்:

மயானேஸ்வரர்

அறிமுகம்:

 திருவாரூர் வடக்கில் உள்ள கங்களாஞ்சேரி சென்று நாகூர் சாலையில் இரண்டு கிமீ பயணித்தால் ரயில் வண்டி இருப்புபாதையை தாண்டியதும் இடதுபுறம் திரும்பும் சாலையில் மூன்று கிமீ சென்றால் விற்குடி உள்ளது. குறுகலான சாலை சிரமப்பட்டு தான் போகணும் திருவிற்குடி துளசியை தல விருட்சமாகக் கொண்ட சிவாலயம்;  வீரட்டானேஸ்வரர் ஆலயத்தின் கீழ்புரத்தில் கிழக்கு நோக்கிய சன்னதியில் மயானேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அது திருமெய்ஞானேஸ்வரர் ஆலயம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

பல நூறாண்டு பழமையான பெரிய அரசமரம் கீழ் இந்த ஆலயம் அமைந்துள்ளது. பிரஸ்தரம் எனப்படும் மேல்மட்டம் வரை கருங்கல் கொண்டும் விமானம் செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. முகப்பில் ரயில் ஓடுகள் கொண்ட நகரத்தார் பாணி கூரை அமைக்கப்பட்டுள்ளது. இறைவன் சற்று பெரிய லிங்கமூர்த்தியாக அமர்ந்துள்ளார். கோயில் தற்போது முறையான பராமரிப்பின்றி உள்ளது. மண்டபம் சுற்றுபுறம் எங்கும் முள் செடிகள் வளர்ந்து கிடக்கிறது. தீர்த்த குளம் போதிய நீர் வரத்தின்றி ஓரங்கள் சரிந்துள்ளன.

புராண முக்கியத்துவம் :

அட்ட வீரட்டான தலங்களிலும் இறைவன் ஒவ்வொரு சிறு சங்காரத்தை செய்திருப்பதால் அவற்றை அடுத்து சிறு மயானங்கள் உள்ளன. இத்தலத்தில் சலந்தரன் என்ற அசுரனை சங்கரித்த மூர்த்தியே மயானேஸ்வரர் என்ற பெயர் தாங்கி அந்த இடத்திலேயே தனிக்கோயில் கொண்டு காட்சி தருகிறார். வீரட்டானேஸ்வரர் மேற்கு நோக்கிய ஆதிமூர்த்தி, மயானேஸ்வரர் சங்கார காலத்தில் காட்சியளித்தவர் ஊரின் தெற்கில் விளப்பாறு எனும் ஆறும் வடக்கில் பில்லாளி என்ற ஒரு ஆறும் ஓடுகிறது. சலந்தரனை சம்ஹாரம் செய்த போது பிளந்ததால் ஏற்ப்பட்ட ரத்த ஆறு பிளப்பாறு எனப்பட்டது தற்போது விளப்பாறு எனப்படுகிறது என்கின்றனர். கோயிலின் மேற்கில் முன்புறம் சங்கு தீர்த்தமும் கோயிலின் கிழக்கில் மயானேஸ்வரர் முன்புறம் சக்ர தீர்த்தமும் உள்ளது. தீர்த்தத்தின் எதிரில் சிறிய கோயிலாக கிழக்கு நோக்கி உள்ளது மயானேஸ்வரர் கோயில் இதுவும் நகரத்தார் உபயத்தில் கட்டப்பட்டது.

#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விற்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top