விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி :
அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில்,
விக்கிரமசிங்கபுரம்,
திருநெல்வேலி மாவட்டம் – 627 425.
போன்: +91- 4634 – 223 45
இறைவன்:
சிவந்தியப்பர்
இறைவி:
வழியடிமை கொண்ட நாயகி
அறிமுகம்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே விக்ரமசிங்கபுரத்தில் அமைந்துள்ள சிவந்தியப்பர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய சிலைகள் கொண்ட பெரிய பரப்பளவைக் கொண்ட ஒரு கம்பீரமான கோயில். பிரதான தெய்வம் சிவந்தியப்பர் என்றும், தாயார் வழியடிமை கொண்ட நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் ஸ்தல விருட்சம் வில்வ மரம். தீர்த்தம் கடனா நதி.
விக்ரமசிங்கபுரம் திருநெல்வேலிக்கு தெற்கே 53 கிமீ தொலைவிலும் அம்பாசமுத்திரத்திலிருந்து 7 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. விக்ரமசிங்கபுரம் அகஸ்தியர் அருவிக்கு அருகில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் தென்காசியில் (29 கிமீ) அமைந்துள்ளது மற்றும் அருகிலுள்ள விமான நிலையம் விக்ரமசிங்கபுரத்தில் இருந்து சுமார் 85 கிமீ தொலைவில் தூத்துக்குடி விமான நிலையம் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
சிவந்தியப்பர் என்ற சிற்றரசர் இப்பகுதியை ஆட்சி செய்தார். சிவபக்தரான அரசர், தன் நிர்வாகம் திறம்பட இருக்கவும், மக்களின் வாழ்க்கை சிறக்கவும் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சிவனுக்கு கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். இவ்விடத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து, கோயில் எழுப்பினார். சிவனுக்கு மன்னன் பெயரான “சிவந்தியப்பர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இங்கு அருளும் சிவந்தியப்பர், அரசர் போல இருந்து மக்களைக் காத்தருளுகிறார். எனவே, அரசருக்குச் செய்யும் மரியாதை போல, சிவலிங்கத்தின் மீது தலைப்பாகை சூட்டி அலங்கரிக்கின்றனர்.
நம்பிக்கைகள்:
வாழும் காலம் சிறப்பாக இருக்கவும், வாழ்க்கைக்குப்பின் மீண்டும் பிறப்பற்ற முக்தி நிலை அடையவும் வழிபடுகின்றனர். திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு சிவனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
தெட்சிணாமூர்த்தி சிறப்பு: இத்தலத்தில் சிவன், தலையில் தலைப்பாகை கட்டியபடி காட்சி தருகிறார். நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். பொதுவாக தெட்சிணாமூர்த்தி இடது கையில் ஏடு அல்லது அக்னியை ஏந்தியபடிதான் காட்சி தருவார். இத்தலத்தில் இவர் தன் இடக்கையை, காலுக்கு கீழ் இருக்கும் நாகத்தின் தலை மீது வைத்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். நாகதோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
வழிகாட்டும் அம்பிகை: தெற்கு நோக்கிய சன்னதியில் காட்சி தரும் அம்பிகைக்கு, “வழியடிமை கொண்ட நாயகி’ என்று பெயர். இவளை பற்றிக்கொண்டால், வாழும் காலம் சிறப்பாக இருக்கவும், வாழ்க்கைக்குப்பின் மீண்டும் பிறப்பற்ற முக்தி நிலை அடையவும் வழிகாட்டியாக இருப்பாள். எனவே, இவளுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. “மார்க்க சம்ரக்ஷணி’ என்றும் இவளை அழைப்பர்.
திருவிழாக்கள்:
புரட்டாசியில் பிரம்மோற்ஸவம், ஐப்பசியில் திருக்கல்யாணம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விக்ரமசிங்கபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தென்காசி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி