Friday Dec 27, 2024

வரதம்பட்டு மன்மதபரமேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி :

வரதம்பட்டு மன்மதபரமேஸ்வரர் சிவன்கோயில்,

வரதம்பட்டு, மயிலாடுதுறை வட்டம்,

மயிலாடுதுறை மாவட்டம் – 609201.

இறைவன்:

மன்மதபரமேஸ்வரர்

இறைவி:

 பார்வதி

அறிமுகம்:

வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து மேற்கில் உள்ள மணல்மேடு செல்லும் சாலையில் பத்து கிமீ தூரத்தில் உள்ள திருவாளப்புத்தூர் வந்து அதன் தெற்கில் ஒரு கிமீ தூரம் சென்றால் வரதம்பட்டு உள்ளது. பரமேஸ்வரன், மன்மதனை எரித்ததால் ‘மன்மதபரமேஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் இறைவன், இக்கிராமத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் கிழக்கு நோக்கிய கோயில். சினம் தணிந்த இறைவன் தேவர்களுக்கு காட்சி கொடுத்த இடத்தில் இறைவன் பிரத்யக்ஷ நாதர் எனும் பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் நான்கு புறமும் மதில்சுவர்கள் உள்ளன, மேற்கில் ஒரு இரும்பு கதவும், அலங்காரவளைவும் உள்ளன. உள்ளே நுழைந்ததும், மகா மண்டபமும், கருவறைக்கு முன் நந்தியும், பலிபீடமும் காணப்படுகின்றன. நந்திக்கு முன்னம் ஒரு சிறிய மாடத்தில் கொடிமர விநாயகர் உள்ளார். கருவறை நுழைவு வாசலில் இடதுபுறம் விநாயகப்பெருமான் மற்றும் வலது புறத்தில் முருகப்பெருமான் ஆகியோரது திருமேனிகள் இருக்கின்றன. ஆலயத்தின் உள்ளே கருவறையில் மூலவரான பிரத்யக்ஷநாதர் லிங்கத் திருமேனியாக மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அம்பிகை தெற்க்கு நோக்கி பார்வதி எனும் பெயரில் சன்னதி கொண்டுள்ளார்.

கருவறை கோட்டங்களில் வடக்கில் துர்க்கையும் தெற்கில் தென்முகனும் உள்ளனர். சண்டேசர் வடகிழக்கு மூலையில் தனி கோயில் கொண்டுள்ளார். தென்மேற்கில் மகாகணபதி வலம்புரியாக உள்ளார். வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிற்றாலயம் கொண்டுள்ளார். தெற்கில் மடைப்பள்ளி உள்ளது அதன் அருகில் பெரிய வில்வமரம் ஒன்று தழைத்து காய்த்து நிற்கிறது. கோயில் காலை மாலை என இருவேளை பூஜை நடக்கிறது. குருக்கள் திருவாளப்புத்தூரில் இருந்து வருவதால் நேரம் அறிந்து செல்லவேண்டும். கோயில் மிக தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. மன்மத பரமேஸ்வரர் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாள் அன்று, ஆலயத்தின் எதிரே உள்ள வீதியில், நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, வீதியை ஒளி மயமாக்கி இறைவனை வழிபடும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்குமாம்.          

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வரதம்பட்டு

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top