Wednesday Oct 02, 2024

வயலூர் குபேரலிங்கம் /பெருமுக நவக்கிரக கோயில், கடலூர்

முகவரி

வயலூர் குபேரலிங்கம் /பெருமுக நவக்கிரக கோயில், வயலூர், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606003.

இறைவன்

இறைவன்: குபேரலிங்கம்

அறிமுகம்

பழமலைநாதர் கோயில் என்று அழைக்கப்படும் விருத்தாசலம் கோயிலின் எட்டு திக்கிலும் அஷ்ட திக்கு லிங்கங்கள் இருந்தன. விருத்தாசலத்தின் நேர் வடக்கில் 2 கிமி தூரத்தில் உள்ளது வயலூர் கிராமம், இது குபேரதிக்கு ஆகும். அதனால் இங்குள்ள இறைவனுக்கு குபேரலிங்கம் என பெயர். விருத்தாசலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள தொடர் வண்டி மேம்பாலத்தினை ஏறிஇறங்கினால் உள்ளது வயலூர் இங்கு பிரதான சாலையில் ஒரு பெரிய குளத்தின் மேற்கு கரையில் கிழக்கு நோக்கிய விநாயகர் கோயில் உள்ளது. அதனை ஒட்டி கிழக்கு நோக்கிய இறைவனாக உள்ளவர் குபேரதிக்கு இறைவன். முன்னர் பெரிய சிவாலயமாக இருந்த இத்தலம் இன்று விநாயகர் தனியாகவும், லிங்கம் தனியாகவும், சண்டேசர் நாகம்,பாதி உடைந்த பைரவர்மூர்த்திகளும் நவகிரகங்களும் தனித்தனி சன்னதி கொண்டு ஒரு சிறிய காம்பவுண்டுக்குள் அடங்கியுள்ளன. இவர் தற்போது உள்ள இடம் ஒரு நீண்ட ஓட்டு கொட்டகையில் உள்ளார்.

புராண முக்கியத்துவம்

விநாயகர் சிற்றாலயம் கிழக்கில் உள்ள குளத்தினை நோக்கியுள்ளது அவரின் இடப்புறம் குபேரலிங்க மூர்த்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார், அவரின் எதிரில் நந்தியும் பலிபீடமும் உள்ளன. வடகிழக்கு பகுதியில் நவகிரகங்கள் உள்ளன. பிற தலங்களில் காண இயலாத காட்சியாக நவகிரகங்களின் முக அமைப்பு பெரிது பெரிதாக உள்ளது இதன் காரணம் அறிய முடியவில்லை எனினும் ஆயிரம் கோயில்கள் சுற்றி வந்த நான், இதுவரை காணத காட்சியினை இத்தலத்தில் கண்டேன் . இந்த பெருமுக நவகிரகங்கள் அனைவரும் கண்டு தொழவேண்டிய ஒன்று. இந்த குபேர இலிங்கத்தினை வழிபடுவோருக்கு செல்வங்கள் கிடைக்கும் என்பது மட்டுமன்றி, இந்த லிங்கமூர்த்தியின் பூஜைக்கு, திருப்பணிக்கு பொருள் தருவோர், முறையில்லா வழியில் செல்வம் சேர்த்திருந்தாலும், அப்பாவங்கள் விலகும் என்பதும் ஒரு நம்பிக்கை. விசேஷ நாட்களில் மக்கள் குழுவாக வந்து செல்கின்றனர். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வயலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருத்தாசலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top