வடுகச்சேரி விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
வடுகச்சேரி விஸ்வநாதர் சிவன்கோயில்,
வடுகச்சேரி, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611109.
வடுகசேரிபாலாஜி – 9003801008
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
கீழ்வேளுரின் தெற்கில் தேவூரை ஒட்டி ஓடும் கடுவையாற்றின் தென்கரையில் 3-கிமீ சென்றால் இந்த வடுகச்சேரியை அடையலாம். இந்த ஊராட்சியில் செங்கமலநாயகிபுரம், கோட்டூர், வடுகச்சேரி ,வடக்குத்தெரு என நான்கு ஊர்கள் உள்ளன. ஊரின் மையத்தில் பெரிய பெருமாள் கோயில் ஒன்றும், செல்லியம்மன் கோயில், வரசித்தி விநாயகர் ஐயனார் கோயில் ஒன்றும் உள்ளன. இவை தவிர ஒரு பெரிய சிவன்கோயில் ஒன்றும் இருந்துள்ளது. காலப்போக்கில் அது சிதைவடைந்திருக்கும் போலிருக்கிறது. தற்போது ஒற்றை கருவறை கோயிலாக இறைவன் விஸ்வநாதர் அதில் வீற்றிருக்கிறார். அதிலேயே இறைவி விசாலாட்சி மற்றும் சண்டேசர் உள்ளார். பெருங்கோயிலின் மீதமாக ஒரு விஷ்ணுவின் சிலை உடைந்து கிடக்கிறது. கருவறைக்கு செல்லும் வாயிலின் இருபுறமும் விநாயகர் முருகன் உள்ளனர். கோஷ்ட மூர்த்திகள் ஏதுமில்லை. இக்கோயிலும் பெரிய மரம் முளைத்து சிதைவுறும் நிலையில் தான் உள்ளது. இன்னும் சிவன்கோயில் அனுமதி கிடைக்கப்பெறாமல் உள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடுகச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி