Saturday Nov 16, 2024

வடக்காலத்தூர் அண்ணாமலையார் (அண்ணாமலைநாதர்) சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

வடக்காலத்தூர் அண்ணாமலையார் (அண்ணாமலைநாதர்) சிவன்கோயில்,

வடக்காலத்தூர், கீழ்வேளூர் வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம்

இறைவன்:

அண்ணாமலையார் என்றும் அண்ணாமலைநாதர்

இறைவி:

உண்ணாமுலையம்மன்

அறிமுகம்:

                 இக்கோயில் கீழ்வேளூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் 4 கிமீ சென்றால் இலுப்பூர்சத்திரம் இங்கிருந்து கிழக்கில் 2 கிமீ தொலைவில் உள்ளது வடக்காலத்தூர். ஊரின் ஈசான்ய மூலையில் இக்கோயில் உள்ளது. தானே தோன்றியவராக உள்ளதால் இறைவன் அண்ணாமலையார் என்றும் அண்ணாமலைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கிழக்கு நோக்கி கோயில் உள்ளது தெரு கோயிலின் பின்புறம் உள்ளது. இறைவன் முன்னர் அர்த்த மண்டபம், மகாமண்டபம் உள்ளது. இந்த மகாமண்டபத்தின் நேர் வெளியில் நந்தி மண்டபம் உள்ளது. இறைவி உண்ணாமுலையம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் உள்ளார். மகாமண்டபத்தில் இவரது கருவறை இணைகிறது. கருவறை கோட்டத்தில் விநாயகர் தென்முகன் துர்க்கை உள்ளனர். சண்டேசர் உள்ளார். வடகிழக்கில் நவக்கிரக மண்டபம் உள்ளது. சுற்றுசுவருடன் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

 இவ்வூரில் சிதம்பரேஸ்வரர் வரதநாராயண பெருமாள் என இரு பழமையான கோயில்கள் உள்ளன. இப்பெருமாள் கோயில் பஞ்சநாராயண ஷேத்ரங்களில் ஒன்று. இரு கோயில்களும் 1200 ஆண்டுகட்கு முற்பட்டது எனப்படுகிறது. ஆனால் போதிய பராமரிப்பு இன்றி சிதைந்து போயின, முன்னர் அவை எவ்வாறு இருந்தன என அறியமுடியவில்லை. எனினும் தற்போது திருப்பணிகள் பெற்று புதிதாய் உள்ளன. சிவாலயத்தின் உற்சவர் மிகவும் புகழ் பெற்றவர் ஸ்ரீகல்யாணசுந்தரமூர்த்தி திருமணஞ்சேரியில் உள்ளது போன்ற கோலம். இறைவனும் இறைவியும் திருமணக்கோலத்தில் மணமகனாகவும் மணமகளாகவும் தரிசனம் அளிப்பதோடு வருவோர்க்கும் அந்த பாக்கியத்தை அளிக்கும் அழகு வடிவம் கொண்டவர். வடக்காலத்தூர் கல்யாணசுந்தரமூர்த்தியே காலத்தால் முற்பட்டவர் என கூறப்படுகிறது. இது முற்கால சோழ வடிவம், ஒன்பதாம் நூற்றாண்டு எனப்படுகிறது.  இக்கோயில் பிற்காலப் பல்லவர் காலத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது… பின்னர் இக்கோயில் செங்கல்தளியாக தற்போது உள்ளது.

இந்த இறைவனை வேண்டி திருமண வரம், மற்றும் குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து இவருக்கு அர்ச்சனைகள் செய்து வழிபடலாம். ஆனால் இன்று இந்த மூர்த்தி பஞ்சலோகக் கல்யாணசுந்தரேசுவரர் திருமேனி தற்போது திருமேனிகள் காப்பகத்தில் உள்ளது.

காலம்

1200 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வடக்காலத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top