மேலமாத்தூர் வைத்தியநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
மேலமாத்தூர் வைத்தியநாதர் சிவன்கோயில் கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612602.
இறைவன்
இறைவன்: வைத்தியநாதர்
அறிமுகம்
மாத்தூர் என்ற பெயரில் பல கிராமங்கள் உள்ளன. கும்பகோணத்தின் தெற்கில் பத்து கிமி தூரத்தில் உள்ள நாச்சியார்கோயில் தாண்டியதும் திருமலைராஜன் ஆறு ஓடுகிறது, அதன் பாலத்தின் அருகில் தென்கரையில் உள்ளது கீழ்மாத்தூர் சிவன்கோயில். இக்கோயில் வரலாற்றின்படி திருசெங்காட்டாங்குடியில் பிள்ளைக்கறி ஏற்ற பெருமான் இங்கு சீராளனை உயிர்பித்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீலஸ்ரீ ஸ்வபோதா நந்த சிவோஹ மகானுக்கு முக்தி அளித்த தலம் இது. இந்த மகான் பெயரில் இவ்வூரை மகான் ஊர் எனப்பட்டது பின்னர் மாத்தூர் என மருவியது. இந்த மாத்தூர் இப்போது கீழ்மாத்தூர், மேல்மாத்தூர் என இருஊர்களாக உள்ளது. இந்த மேல்மாத்தூரில் ஒரு சிவாலயம் இருந்து பின்னர் காலப்போக்கில் அழிந்துள்ளது. அதில் இருந்த ஒரு லிங்கமூர்த்தி ஊர்மக்களால் சாலையோரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கூரையின்றி கோடைவெயிலில் தகித்தபடி இருக்கிறார். தற்போது எம்பெருமான் தரமான தகரகொட்டகையில் அமர்ந்துள்ளார். இறைவனை வைத்தியநாதர் என அழைக்கலாம். சுத்தவித்தை எனும் சுத்த மாயா தத்துவத்தைத் உருவாகக்கொண்டு நிற்கும் லிங்க திருமேனிகள் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என மூன்றையும் உள்ளடக்கியவை. சுத்தவித்தையில் பரசிவன் பிரமனாக நின்று படைத்தலையும், விஷ்ணுவாக நின்று காத்தலையும், உருத்திரனாக நின்று அழித்தலையும் செய்கின்றான். இப்படிப்பட்ட லிங்கமூர்த்திக்கு . சிவாலயம் எழுப்புவதால் கிடைக்கும் நன்மைகள்!! எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் பிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலமாத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி