Monday Nov 25, 2024

மேலமருதாந்தநல்லூர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி :

மேலமருதாந்தநல்லூர் சிவன்கோயில்,

மேலமருதாந்தநல்லூர், மயிலாடுதுறை வட்டம்,

மயிலாடுதுறை மாவட்டம்

இறைவன்:

சிவன்

அறிமுகம்:

மயிலாடுதுறையின் வடக்கில் நீடூர் வழி செல்லும் வில்லியனூர் சாலையில் ஏழாவது கிமீ-ல் கொண்டல் பாலம் உள்ளது அதன் வடகரையில் வலதுபுறமாக 2 ½ கிமீ சென்றால் மேல மருதாந்தநல்லூர். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. இதனால் உழவுத் தொழில் புரியும் நல்லூர் எனும் பொருளில் மருதநல்லூர் எனப்பட்டது. மேல, கீழமருதாந்தநல்லூர் என இரு பிரிவுகளாக உள்ளது. இந்த மேலமருதாந்தநல்லூரில் பெரிய குளக்கரையில் பழமையான சிவாலயம் இருந்தது, காலப்போக்கில் சிதைந்து போக ஊர் மக்கள் அந்த மூர்த்திகளை எடுத்து நீண்ட தகரகொட்டகை அமைத்து கோயிலாக்கி உள்ளனர். இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார் அருகில் அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார். அருகில் சண்டேசர் எதிரில் நந்தி பலிபீடம், தென்புறம் நோக்கிய தக்ஷணமூர்த்தி, பின்புறம் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர். உள்ளனர்.

”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேலமருதாந்தநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top