மேலஆதிச்சமங்கலம்சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
மேலஆதிச்சமங்கலம் சிவன்கோயில்,
மேலஆதிச்சமங்கலம், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 613705.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
குடவாசலின் தெற்கில் ஓடும் சோழ சூடாமணி ஆற்றை கடந்து நேர் தெற்கில் 6கிமீ தூரத்தில் உள்ள செல்லூர் வந்து அங்கிருந்து கிழக்கில் திரும்பும் கீரந்தங்குடி (கீரன்தேவன்குடி) சாலையில் ஒரு கிமீ தூரம் வந்து கீரந்தங்குடியின் தெற்கில் ½ கிமீ தூரத்தில் உள்ளது மேலஆதிச்சமங்கலம். ஊர், நத்தமும், ஸ்ரீகோயிலும், நந்தவனமும் குளங்களும் இறையிலி நிலம்…..” என கீரன்தேவன்குடி இறையிலியாக கொடையளிக்கப்பட்ட ஊர் என கல்வெட்டு உள்ளது.
ஆதிச்சமங்கலத்துள் செல்லும் முன்னரே சாலையோரத்தில் சிறிய தகர கொட்டகையில் கோயில் கொண்டுள்ளார் எம்பெருமான். சிறிய வாய்க்காலை தாண்டியதும் மேற்கு நோக்கியபடி காட்சியளிக்கிறார் 6 முழ சுற்று கொண்ட பெரிய ஆவுடையார். இக்கொட்டகையின் வெளியில் இவருக்கான அம்பிகை சௌந்தர்ய ரூபிணியாக தெற்கு நோக்கி இருத்தப்பட்டுள்ளார். ஒருவேளை பின்னம் ஆகியிருக்க கூடும். ஆதித்தன்மங்கலம் என்பதால் சோழர்களால் இவ்வூரும் கொடையளிக்கப்பட்ட ஊராக இருக்கலாம். இம்மூர்த்தியின் பெயர் என்ன? கோயில் எங்கே? அதனை கட்டியது யார்? அது என்னவானது? அது எந்த காலம்? ஊரில் இருந்து தள்ளி இங்கு வந்தது எவ்வாறு? பிற மூர்த்திகள் எங்கே? என அறியமுடியவில்லை.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மேலஆதிச்சமங்கலம்