Friday Dec 27, 2024

முலப்பாக்கம் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி

முலப்பாக்கம் சிவன்கோயில் மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609001

இறைவன்

இறைவன்: முலப்பாக்கம் சிவன்

அறிமுகம்

மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோயில் சாலையில் உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியை தாண்டியதும் வலது புறம் செல்லும் சாலையில் 2கிமி சென்றால் முலப்பாக்கம் அடையலாம். முளப்பாக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு பழமை வாய்ந்த சிவாலயம் ஒன்று கிழக்கு நோக்கி உள்ளது. ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவாலயம் இன்று இருக்கும் நிலை மிகுந்த பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. பெரும் சிதிலத்துடன் காட்சியளிக்கிறது. சரியான பூஜைகளும் இல்லை. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் உள்ளார்கள். இருசன்னதிகளையும் ஒரு முகப்பு மண்டபம் இணைக்கிறது. அதன் முன்னர் ஒரு மகாமண்டபம் கூம்பு வடிவ கூரையுடன் இருந்துள்ளது, தற்போது கூரை பகுதி முற்றிலும் இடிந்து வீழ்ந்து போயுள்ளது. திருப்பணிகள் துவங்கப்பட்டு பாதியில் அதுவும் நின்றுள்ளது. வெளி சுற்றில் உள்ள விநாயகர் முருகன் சன்னதிகளும் இறைவடிவங்கள் இன்றி வெறும் மாடங்களாக உள்ளன.

புராண முக்கியத்துவம்

இந்த லோகத்தில் பிரமஸ்வரூபத்தை தெரிந்துக்கொண்டவன் அந்தஸ்வரூபமே ஆகிறான், பிரமஸ்வரூபம் தெரிந்துக்கொள்ளாதவனுக்கு நாசமானது சம்பவிக்கிறதென்றும், ஞானிகள் கூறுவர். ஆத்மாவை அறிந்துக் கொண்டு மரணமடைந்த பின்பு புனர்ஜனனம் இல்லாத மோட்சத்தைப் பெற்றுப் பரமானந்தத்தை யடைகிறாகளென்றும், வேதங்கள் கூறுகின்றன. எப்படி பிரம்மஸ்வரூபத்தை அறிந்து கொள்வதென்றால் உலகியல் பொருட்கள் மேல் உள்ள பற்றை விடுத்து அப்பொருளைகொண்டு பழுதடைந்த ஆலயங்களை புனர் நிர்மாணம் செய்தலும், எந்நேரமும் மனதிற்குள் பஞ்சாட்சர மந்திரம் ஜபித்தலும் பிரம்மா ஸ்வரூபம் அறிந்து கொள்ளும் ஞானத்தை அளிக்கும். “ஞான மேவ மோக்ஷஹா” என்று வேதம் கூறுகின்றது. “ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராண நல்ல வாகமஞ் சொல்ல” என்றும், “கிரியையென பருவுமவை யாவும் ஞானங் கிடைதற்கு நிமித்தமெனக் கிடைக்கும்” என சிவஞானசித்தியாரிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆலய கைங்கர்யங்களுக்கு முயற்சிப்போம், இயன்ற பொருளும் கொடுப்போம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top