Sunday Nov 24, 2024

மாயனுர் ருத்ராக்ஷபுரீஸ்வரர் சிவன்கோயில், கருர்

முகவரி :

மாயனுர் ருத்ராக்ஷபுரீஸ்வரர் சிவன்கோயில்,

மாயனுர்,

கருர் மாவட்டம் – 639108.

இறைவன்:

ருத்ராக்ஷபுரீஸ்வரர், நீலகண்டேஸ்வரர்

இறைவி:

அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்:

 இக்கோவில் கருர் மாவட்டம் திருச்சி செல்லும் சாலையில் 25 கி.மீ தொலைவில்  காவிரியின் தென்கரையில் மாயனுர் எனும் ஊர் உள்ளது. இவ்வூரின் மேற்கே 1 கிமீ காவிரிக்கரையில் வந்தால் கீழமாயனுர் எனும் ஊர் உள்ளது. இந்த ஊரில் ஆற்றங்கரையில் தான் ஒரு மிகப்பெரிய சிவன்கோவில் புதைந்திருந்தது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மையமாக அமைந்திருப்பதால் தான் இந்த ஊர் மைய ஊர்  என்பது மையனுர் பின் மாயனுர் ஆக மாறியுள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

மண்ணுக்குள் புதைந்து போன இந்த சிவன் கோவில் புதைந்துள்ள மண்மேட்டின் இடத்தை ஒவ்வொருமுறை  கடந்து செல்லும் போது இவரையும் அறியாமல் ஒரு உணர்வு ஏற்படவே,  ஒரு நாள் இந்த முள்காடாய் இருந்த இடத்தை ஆய்வு செய்து பார்த்துள்ளார். நன்கு சுற்றும் முற்றும் பார்த்த போது இக்கோவிலின் கட்டிடப்பகுதிகள் மண்மேட்டிற்குள் புதைந்திருந்தது தெரியவரவே உள்ளுரில் உள்ள மக்களின் உதவியுடன் 30.05.2018 அன்று தோண்ட ஆரம்பித்துள்ளனர். தோண்டத்தோண்ட மிகப்பெரும் சிவன்கோவிலே புதைந்திருந்தது வெளிப்பட்டுள்ளது.

இம் மாயனூர் சிவன் கோவில் அமைந்துள்ள பகுதியானது காவிரி நதியின் தென் கரையில் மிகவும் தாழ்வான பகுதியில் இருந்திருக்கிறது. பெரும் வெள்ளப்பெருக்கால் புதைய  ஆரம்பித்த இக்கோவில் நாளடைவில் மண்சேர்ந்து முட்செடிகள் முளைத்து மண் மூடிப் போய் இருக்க வேண்டும். மிகப்பெரிய அளவிலான சுற்று மதிலும், பெரிய  நுழை வாயிலும், இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து 16 கால் மண்டபம் ஒரு ஒழுங்கற்ற முறையில் உள்ளது. இக்கோவில் தற்போது உள்ள நிலையையும் விட கீழே 4 அடிக்கு கீழே தான் அஸ்திவாரம் உள்ளது.

கோவிலின் மேற்கு பக்கம் ஒரு கருவறை உள்ளது. இக்கருவறையில் உள்ள கட்டுமானங்களை பார்த்தால் கற்கோவிலாக கட்டப்பட்டு பின் செங்கற்கள் கொண்டு பராமரிப்பு பணிகளும் செய்துள்ளனர். இக்கோவில் பல்லவர் காலம் முதலே வழிபாட்டில் இருந்துள்ளதை இக்கருவறையின் அருகேயுள்ள வீணா தட்சிணமூர்த்தி யை வைத்தே அளவிடலாம்.

சிவலிங்கம் தோண்டி எடுக்கப்பட்ட போது  கட்டுகள் போன்ற அமைப்பில் ஆவுடையும், ருத்ராட்சம் போன்ற அமைப்பில் லிங்கமும் இருந்தது சிறப்பு. இதைப் போன்று ஆவுடை அமைப்பில் சிவலிங்கம் காண்பது மிகவும் அரிதான ஒன்று. இக்கோவிலில் கன்னி மூலையில் தோண்டி எடுக்கப்பட்ட விநாயகர் சிலையும் வாகனமும்,  இக்கோவில் கட்டுமானத்தில் சுவற்றில் வைக்கப்பட்ட விநாயகர், ஹனுமன், மற்றும் முருகன் சிலைகளைக் காண முடிகிறது. இக்கோவிலில் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. ருத்ராட்சேஷ்வரர்க்கு வலது பக்கத்தில் உள்ள சிவன் நீல காண்டேஸ்வரர் இவர் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்டவர்.

ருத்ராட்சேஸ்வரருக்கு வலது பக்கத்தில் தென்முகமாக அகிலாண்டேஸ்வரி அம்பாள் கருவறை இருந்திருக்கிறது. இதனையும் காண முடிகிறது. கருவறை அமைந்திருந்த இடத்திலேயே அம்பாள் சிலையும் அமைத்துள்ளனர்.  சண்டிகேஸ்வரர், காலபைரவர், தட்சிணாமூர்த்தி மற்றும்  நவகிரகங்களும் உள்ளது. வெட்ட வெளியில் இருந்த சுவாமிகளுக்கு  ஆஸ்பெட்டஸ் அமைத்து பராமரித்து வருகின்றனர்.

திருவிழாக்கள்:

                             ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் நாட்டு பசும்பால் கொண்டு சிறப்பு பூஜை  செய்யப்படுகிறது. பிரதோஷம், பௌர்ணமி, சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் விசேஷ பூஜை நடைபெறுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மாயனுர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கருர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top