மாப்படுகை திருமேனி அழகியநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
மாப்படுகை திருமேனி அழகியநாதர் சிவன்கோயில்,
மாப்படுகை / பண்டாரவாடை, மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609003.
இறைவன்:
திருமேனி அழகியநாதர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
மயிலாடுதுறை – கல்லணை சாலையில் உள்ள தொடர்வண்டி இருப்புகதவுகளை தாண்டினால் உள்ளது மாப்படுகை / பண்டாரவாடை எனவும் அழைக்கப்படுகிறது. பிரதான சாலையின் வடக்கில் உள்ளது இக்கோயில். ஒரு ஏக்கர் பரப்பில் உள்ளது வளாகம்.கிழக்கு நோக்கிய கோயில், முகப்பு கோபுரமில்லை, சுதை அலங்கார வாயில் மட்டும் உள்ளது. முற்றிலும் செங்கல்லினால் கட்டப்பட்ட இக்கோயில் நீண்ட முகப்பு மண்டபம் கூடியதாக உள்ளது. கருவறை வாயிலில் லட்சுமி விநாயகர் உள்ளார். இறைவன்- திருமேனி அழகியநாதர் இறைவி – சௌந்தரநாயகி இறைவி தெற்கு நோக்கியுள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முககடவுள், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோரும் உள்ளனர்.
கோயிலின் வடபுறம் பெரிய வன்னியின் கீழ் பழமையான ஐயனார், சந்திரன் சிலைகள் உள்ளன. நவகிரகத்தில் அனைத்து கிரகங்களும் சூரியனை நோக்கி உள்ளது சிறப்பு. சூரியனும் சந்திரனும் மேற்கு நோக்கி ஒரே நேர்கோட்டில் உள்ளது இன்னும் சிறப்பு. சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனின் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் முழு சந்திரகிரகணம் எனவும், பகுதி அளவு மறைத்தால் பகுதி சந்திரகிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சந்திர கிரகண நாளில் இக்கோயில் இறைவனை வழிபட்டு நவகிரங்களை வழிபடுவதன் மூலம் கடகம், ரிஷபம், விருச்சிக ராசிக்காரர்கள் நற்பலன்கள் பெறலாம். பிற ராசிக்காரர்கள் சந்திரதோஷம் வராமல் காத்துக்கொள்ளலாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மாப்படுகை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி