Sunday Nov 24, 2024

மானியம்ஆடூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி

மானியம்ஆடூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோயில் மானியம்ஆடூர், காட்டுமன்னார் கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608 303

இறைவன்

இறைவன் : பிரம்மபுரீஸ்வரர் இறைவி : கமலாம்பிகை

அறிமுகம்

காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் முப்பதிற்கும் மேற்ப்பட்ட சிவாலயங்கள் உள்ளன, அவற்றில் ஐந்து மட்டுமே பாடல் பெற்றவை இவற்றினைமட்டுமே சிவனடியார்கள் தரிசனம் செய்கின்றனர், மீதமுள்ளவை உள்கிராமங்களில் பழுதுற்று காட்சியளிக்கின்றன. அவற்றில் ஒன்று மானியம் ஆடூர் , காட்டுமன்னார்கோயில் வடக்கில் உள்ள வீராணத்தின் கரையில் நத்தமலை என்ற ஊரில் இருந்து கிழக்கில் ஒரு கிமி சென்றால் மானியம்ஆடூர். இங்கு கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக உள்ளது சிவாலயம். இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஒரு ஏக்கர் பரப்பில் இறைவி கமலாம்பிகை இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவியும் இடப்பாகத்தில் கிழக்கு நோக்கியும் உள்ளனர். இது திருமணத்தின் பிந்தைய கோலம் ஆகும். சுற்று மதில் சுவர் இல்லை, கம்பி வேலி மட்டும் உள்ளது. பிரகாரத்தில் விநாயகர் முருகன் ஆகியோரும், வடகிழக்கு பகுதியில் ஒரு லிங்கமும், அதன் அம்பிகையும் உள்ளனர். நவகிரகங்களும், பைரவர், சூரியன் சன்னதிகளும் உள்ளன. சிவாலயத்தை ஒருகாலபூஜை எனும் மெல்லிய நூலால் காலம் கட்டியிழுக்கிறது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மானியம் ஆடூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காட்டுமன்னார்கோயில்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top