மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் குடைவரை சிவன்கோயில், புதுக்கோட்டை
முகவரி
மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் குடைவரை சிவன்கோயில், மலையடிப்பட்டி, குளத்தூர் வட்டம், , புதுக்கோட்டை மாவட்டம் – 622502
இறைவன்
இறைவன்: வாகீஸ்வரமுடையார்
அறிமுகம்
மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள மலையடிப்பட்டி என்ற ஊரிலுள்ள சிவன் கோயில் ஆகும். இது ஒரு குடைவரைக்கோயில். இவை பாண்டியர் மற்றும் முத்தரையர் குடைவரைகள். துவாக்குடியிலிருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16கிமீ தூரத்திலும், புதுக்கோட்டையிலிருந்து சுமார் 33 கிமீ தூரத்தில் கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் இக்கோயில் உள்ளது. மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. ஒன்று சிவனுக்கும் மற்றொன்று திருமாலுக்கும் உரியது. சிவனுக்குரிய இக்கோயில் வாகீஸ்வரமுடையார் கோயில் எனப்படுகிறது. கருவறையில் தாய்ப்பாறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். அர்த்தமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. மண்டபச் சுவரில் கருவறைக்கு நேராக சங்கரநாராயணர், துர்க்கை சிற்பத் தொகுதிகள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. ஏழுகன்னிகளின் சிற்பத் தொகுதியும் அமைந்துள்ளது. இக்குடைவரைக் கோயிலைத் தந்திவர்மன் காலத்தில் கி.பி. 812-இல் விடேல்விடுகு முத்தரையன் குவாவன் சாத்தன் என்பவன் திருவாலந்தூர் மலையில் எடுப்பித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
காலம்
8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மலையடிப்பட்டி,
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை