மலப்புரம் நாராயணன் கோயில், கேரளா
முகவரி
மலப்புரம் நாராயணன் கோயில் மலப்புரம், கேரளா 676505
இறைவன்
இறைவன்: நாராயணன் (விஷ்னு)
அறிமுகம்
ஸ்ரீ நாராயண கோயில் கேரளா மாநிலத்தில் மலப்புரத்தில் அமைந்துள்ள கோயில். விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1921 முஸ்லீம் கலவரங்களில் இந்த கோயில் அழிக்கப்பட்டது, இப்பொழுதும் ஜிஹாதிகள் நுழைவதைத் தடுக்கிறார்கள். கோயில் முற்றிலும் பாழடைந்த நிலையில் உள்ளது. சிறப்பு நாளில் கிராம மக்கள் சில பூஜைகளை நடத்துகிறார்கள். சில சிற்பங்கள் கோயிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன. இந்நிலம் கேரளாவின் நாராயண கோவிலுக்கு சொந்தமானது என்பதை கணக்கெடுப்பு பதிவுகள் நிரூபிக்கின்றன. ஆனால் முஸ்லிம்கள் இப்போது நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். நாராயண கோயிலின் முஸ்லீம் முற்றுகையை நீக்க நீதிமன்றங்களை அணுகுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது, மலப்புரம், நாராயண கோயிலில் வழிபாடு செய்வது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்ற கேரள காவல்துறை அறிக்கையை மலப்புரம் மாவட்ட நிர்வாகம் நிராகரித்துள்ளது. ஆனால் இப்போது கோயில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சுற்றியுள்ள கிராம மக்கள் நாராயண பகவானை கவனித்து, சில சிறப்பு நாளில் வழிபடுகிறார்கள்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மலப்புரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சோரனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோழிக்கோடு