Thursday Dec 19, 2024

மணிமூர்த்தீஸ்வரம் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி

மணிமூர்த்தீஸ்வரம் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி திருக்கோயில், மணிமூர்த்தீஸ்வரம், திருநெல்வேலி மாவட்டம்- 627

இறைவன்

இறைவன்: ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி

அறிமுகம்

பொ துவாக சிவபெருமான், அம்பாள் மற்றும் பெருமாளுக்குதான் ராஜ கோபுரம், சுற்றுப் பிராகாரங்கள் மற்றும் அழகிய மண்டபங்களுடன் கூடிய பெரிய அளவிலான தனிக் கோயில் அமைந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். இந்த ஆலயங்களில் பிரதான மூலவராக (லிங்க வடிவில்) சிவபெருமானோ, அம்பாளோ, பெருமாளோ அருள்பாலித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், விநாயகருக்கென்று தனியே, பெரிய- ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் கூடிய ஓர் அற்புதமான கோயில் அமைந்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா! 900 வருடங்கள் பழைமையான கோயில்… இதன் நீளம் சுமார் 80 மீட்டர். அகலம் 40 மீட்டர்… 22 அடி உயரத்துக்கு அண்ணாந்து பார்க்க வைக்கும் பிரமாண்டமான மதில்… மூன்று பிராகாரங்கள்… எட்டு மண்டபங்கள்… ஆலயத்துக்குள் ஈஸ்வரன் மற்றும் அம்பாள் சந்நிதிகள்… பிராகாரங்களில் சுற்று தேவதைகள்… சித்திரை மாதம் 1, 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் காலை நேரத்தில் சுமார் ஐந்தேமுக்கால் மணியளவில் தனது கிரணங்களால் விநாயகருக்கு சூரிய பகவான் நடத்தும் வழிபாடு… அந்த நேரத்தில் தகதகவென தங்கம் போல் ஜொலிக்கும் கணபதியின் அழகு. இப்படி எண்ணற்ற சிறப்புகளுடன், விநாயகரை பிரதான மூலவராக வழிபடும் வழக்கம் உள்ள கோயில் எது தெரியுமா? மணிமூர்த்தீஸ்வரம் ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி ஆலயம்தான் அது! பிள்ளையார்பட்டியில் ஸ்ரீகற்பக விநாயகர் தனிக் கோயில் கொண்டு அருள் பாலிப்பது போல் திருநெல்வேலி மாநகரில் தாமிரபரணி நதிக்கரை அருகே குடி கொண்டுள்ளார் இந்த உச்சிஷ்ட கணபதி. நெல்லை சந்திப்பில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு. வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில், ஆற்றுப் பாலத்துக்குக் கிழக்கே உள்ளது இந்தத் திருக்கோயில். இங்கு, விநாயகருக்குரிய முப்பத்திரண்டு வடிவங்களில் எட்டாவதான உச்சிஷ்ட கணபதி வடிவத்தில்- தன் தேவியான வல்ல(பை)பியை இடது தொடையில் அமர வைத்து அணைத்தபடி அருள் பாலிக்கிறார் விநாயகர். உச்சிஷ்ட கணபதி கோயில் கொண்டுள்ள இந்த இடத்தை மணிமூர்த்தீஸ்வரம் என்கிறார்கள்.

புராண முக்கியத்துவம்

எழுநூறு வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததாம். அதன் பிறகு எங்களுக்கு நினைவு தெரிந்த வரையில் கும்பாபிஷேகம் நடந்ததாகத் தெரியவில்லை. 1960-ஆம் ஆண்டு வரை இங்கு வழிபாடுகள் ஓரளவு சிறப்பாக நடந்து வந்துள்ளன. அதன் பின் எல்லாமே நின்று போயின. ஆலயத்துக்குள் செடி-கொடிகள் வளர்ந்து யாருமே உள்ளே நுழைய முடியாத அளவுக் குப் போய்விட்டது. இந்த நேரத்தில்தான் சமூக விரோதிகள் சிலர், கோயிலுக்குள் புகுந்து அதை தங்களது இருப்பிடமாக மாற்றிக் கொண்டார்கள். யாராலும் எதுவுமே கேட்க முடியவில்லை. ஆற்றங்கரை ஓரமாக இருப்பதால் எவருமே இந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் தண்ணீர் கோயிலுக்குள் வந்து விடும். இப்படித்தான் இந்த அற்புதமான விநாயகர் ஆலயம் பாழ்பட்டுப் போனது. ஆலய மதிலில் இருந்த பெரிய பெரிய கருங்கற் களைப் பலரும் தூக்கிப் போய் விட்டார்கள். இப்படி ஏராளமான கருங்கற்கள் களவு போய் மதில், வெறும் காரைச் சுவராக பலம் இல்லாமல் நிற்கிறது. பல இடங்களில் பெயர்ந்தும் விழுந்து விட்டது. கோபுரத்தின் உச்சியில் தேக்கு மரத்தால் ஆன உத்தரங்களைப் பொருத்தி இருந்தார்கள். அவற்றையும் பெயர்த்துச் சென்று விட்டனர். ஆலயத்தில் என்னென்ன விக்கிரகங்கள் முன்பு இருந்தன என்று எவருக்கும் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இப்படி பல விக்கிரகங்கள் களவு போய் விட்டன. இதில், பஞ்சலோகத்தால் ஆன ஆலய உற்சவர் விக்கிரகங்களும் அடக்கம்’’ என்றார் ஆன்மிக அன்பர் ஒருவர்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ராம்-முத்துராம் திரையரங்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top