பொன்மார் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
முகவரி
பொன்மார் பெருமாள் கோயில், பொன்மார் நாவலூர் சாலை , திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 600 130.
இறைவன்
இறைவன்: பெருமாள்
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த பொன்மார் கிராமம். மேடவாக்கம்- மாம்பாக்கம் சாலையில் பொன்மார் உள்ளது. தாம்பரம் , கோயம்பேடு பேருந்து நிலயத்திலுருந்து பொன்மார் வழியாக பேருந்துகள் செல்கின்றன. மாம்பாக்கத்திலிருந்து 3 கிமீ தொலைவில் இக்கோவில் உள்ளது. இந்த ஊரில் முழுவதும் கற்களால் கட்டப்பட்ட பெருமாள் கோயில் தற்போது இடிந்து புதர்கள் மண்டி காட்சி அளிக்கிறது. உள்ளே தெய்வ சிலைகளேதும் இல்லை. இதுபற்றி விவரம் சொல்வோரும் யாரும் இல்லை. பழம்பெரும் இவ்வாலயம் சீர்செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளது. ஆலயம் முற்றிலுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பொன்மார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தாம்பரம், பெருங்களத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை