பொன்மான்மேய்ந்தநல்லூர் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
பொன்மான்மேய்ந்தநல்லூர் காசி விஸ்வநாதர் சிவன்கோயில்,
பொன்மான்மேய்ந்தநல்லூர், பாபநாசம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 614204.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
ராமசீதா காவியத்தில் வரும் மாரீசன் எனும் மானை ராமன் தேடிய ஊர் பொன்மான் மேய்ந்த நல்லூர். இதனை மெய்பிக்கும் விதமாக உள்ளது இந்த பகுதியில் உள்ள ஊர்கள். பாபநாசம்-திருக்கருகாவூர் சாலையில் உள்ள வலத்தமங்கலம் எனும் இடத்தில் மேற்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ள தேவராயன்பேட்டை சென்று அதன் தெற்கில் ½ கிமீ தூரத்தில் உள்ளது இந்த பொன்மான்மேய்ந்தநல்லூர். மக்கள் பேச்சுவழக்கில் பொம்மா நல்லூர் எனவும், பொன்மாச நல்லூர் எனவும் உள்ளது. சிறிய கிராமம், ஊரின் மையதெருவில் உள்ள ஒரு அழகிய தாமரை நீர்நிலையின் கரையில் கிழக்கு நோக்கிய சிவாலயம் இருந்து பழுதுற்றிருந்தது. அதனை ஊர்மக்களும், அரன் பணி அறக்கட்டளையினரும் சேர்ந்து முற்றிலும் திருப்பணி செய்து குடமுழுக்கு கண்டுள்ளனர்.
கிழக்கு நோக்கியபடி இறைவன் திருக்கோயிலும், தென்திசை நோக்கியவண்ணம் அம்பிகை திருக்கோயிலும், நவகிரகம், பைரவர், சூரிய சந்திரர்களுக்கு தனி மாடங்களும் தயாராக உள்ளன. தற்போது இறைவன் காசி விஸ்வநாதரும் இறைவி காசி விசாலாட்சியும் மற்றும் நந்தி பைரவர் சண்டேசர் ஆகியோர் ஒரு தகர கொட்டகையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பொன்மான்மேய்ந்தநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி