பெண்ணாடம்-கொத்தட்டை புலிங்கேஸ்வர் சிவன்கோயில், கடலூர்
முகவரி
பெண்ணாடம்-கொத்தட்டை புலிங்கேஸ்வர் சிவன்கோயில், கடலூர்
இறைவன்
இறைவன்: புலிங்கேஸ்வர் இறைவி: கோமளவல்லி
அறிமுகம்
பெண்ணாகடத்தின் மேற்கு எல்லையோர கிராமம் தான் இந்த கொத்தட்டை. கொற்றவன் திட்டை என்பதே கொத்தட்டை ஆகியிருத்தல் கூடும். இக்கிராமத்தை தொடர்வண்டிப்பாதை இரண்டாக பிரிக்கிறது. அதில் கொத்தட்டை கிராமம் மேற்கிலும், சிவன்கோயில் கிழக்கில் பெண்ணாடம் பகுதியில் உள்ளது. பெரும் வயற்பரப்பின் நடுவில் சிவாலயம் அமைந்துள்ளது, நாம் சென்றது கொத்தட்டை கிராமம் வழி. பிரதான நெடுஞ்சாலை NH141 ல் பெண்ணாகடம் தொடர்வண்டி மேம்பாலத்தை தாண்டியதும் வலது புறம் செல்லும் இறையூர் – கண்டப்பன்குறிச்சி சாலையில் 2 ½ கிமி சென்றால் கொத்தட்டை கிராமம் இங்கிருந்து தொடர்வண்டிபாதையை கடந்து சிறிய வரப்பின் மீது தட்டுத்தடுமாறி சென்றால் சிவாலயம் அடையலாம்.
புராண முக்கியத்துவம்
பெரும் வயற்பரப்பின் நடுவில் உள்ளது அருள்மிகு கோமளவல்லி உடனுறை புலிங்கேஸ்வர் ஆலயம். வயல்பரப்பில் மழை,வெயில் காலங்களில் மண் தரையில் ஏற்படும் மாற்றங்களால் கோயில் கருவறை விரிசல் விழுந்து அம்பிகை கருவறை, முருகன் விநாயகர் சிற்றாலயங்கள் இடிந்து பாழ்பட்டுப்போயின, மீதமிருந்த இறைவன் கருவறையும் மூர்த்தியின் மீது விழுந்துவிடுமோ என அஞ்சத்தக்க நிலையில் உள்ளது. அதனால் மூர்த்திகளை மட்டும் தனி கொட்டகையில் தற்காலிகமாக வைத்துள்ளனர். இக்கோயில் பெண்ணாடத்தை சேர்ந்த கார்கார்த்த வேளாள குடும்பத்தினருக்கு சொந்தமானது. முறையான பாதை வசதி இல்லாமையால் கோயில்பராமரிப்பும் வழிபாடும் விட்டுப்போனதாக தெரிகிறிது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
நம்பிக்கைகள்
இந்திரனின் பூஜைக்காக பூலோக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர் பெண்ணாகடத்து இறைவனைக் கண்டு இங்கேயே தங்கி வழிபட ஆரம்பித்தனர். மலர் வராமைக் கண்ட இந்திரன் காமதேனுவை அனுப்ப அதுவும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவை தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளையானையை அனுப்ப, அதுவும் இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து, பெருமானை வழிபட்டான் என்பது வரலாறு. எனவே மேற்சொல்லிய மூவரும் (பெண் + ஆ + கடம்) வழிபட்டதலம் – பெண்ணாகடம் எனப் பெயர் பெற்றதென்பர். இவ்வூரில் ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் கடந்தை நகர் எனப் பெயர் பெற்றதென்பர் . தயராசபதி புஷ்பவனம் மகேந்திரபுரி.பார்வதிபுரம் சோகநாசனம் சிவவாசம் என பல பெயர்கள் உண்டு.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெண்ணாடம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பெண்ணாடம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி