பூசலாங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
பூசலாங்குடி கைலாசநாதர் சிவன்கோயில்,
பூசலாங்குடி, திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610203.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் எட்டு கிமீ தூரத்தில் உள்ள மாங்குடி தாண்டியதும் வலதுபுறம் திரும்பும் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் பூசலாங்குடி அடையலாம். இங்கு மேற்கு நோக்கிய சிவன்கோயில் ஓர் பெரிய குளத்தின் கரையில் உள்ளது. இறைவன் – கைலாசநாதர் இறைவி – அகிலாண்டேஸ்வரி பழமை வாய்ந்த கோயில் மீளுருவாக்கம் அடைந்துள்ளது எனலாம். இறைவன் கைலாசநாதர் கோயில் தனியாகவும் அம்பிகை கோயில் தனியாகவும் தெற்கு நோக்கி உள்ளது. இறைவன் நேர் எதிரில் நந்திக்கு ஓர் மண்டபம் உள்ளது.
இறைவன் கருவறையை சுற்றி கோஷ்டம் என எதுவுமில்லை. தெற்கில் ஒரு மாடத்தில் சிறிய தக்ஷ்ணமூர்த்தி உள்ளார். தென்மேற்கு மூலையில் பொய்யா விநாயகர் என பெயர் கொண்ட விநாயகர் உள்ளார். வடமேற்கில் சற்று பெரிய சிற்றாலயமாக வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். இறைவன் கருவறையின் வடக்கில் சிறிய சிற்றாலயம் ஒன்றில் சண்டேசர் உள்ளார். வடகிழக்கில் தெற்கு நோக்கிய பைரவர், மற்றும் ஒரு சதுர பீடம் கொண்ட பெரிய லிங்க மூர்த்தி ஒருவரும் உள்ளார். அதனை அடுத்து ஒரு மாடத்தில் நின்ற கோலத்தில் விஷ்ணு உள்ளார். கைலாசநாதர் என்றாலே ஆயிரம் ஆண்டுகள் கடந்த மூர்த்தியாவார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூசலாங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி