Friday Dec 27, 2024

புனே பீமாசங்கர் (ஜோதிர்லிங்கம்) கோயில், மகாராஷ்டிரா

முகவரி

அருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் கோயில், புனே, பீமாசங்கர், மகாராஷ்டிரா 410509

இறைவன்

இறைவன்: பீமாசங்கர்(சிவன்)

அறிமுகம்

பீமாசங்கர் கோயில் என்பது மகாராட்டிர மாநிலம், புனே மாவட்டம் சகியாத்ரி மலைப்பகுதியில் டாங்கினி என்ற இடத்தில் உள்ள ஒரு குன்றிமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இத்தலம் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கிமீ தொலைவிலும் உள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இக்கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பீமாசங்கரர் கோயில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக் கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது. இக்கோயிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவரால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளார். இப் பகுதியில் உள்ள பிற சிவன் கோயில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புராண முக்கியத்துவம்

பீமன் என்ற அரக்கனை அழிக்க சிவபெருமான் இங்கே தோன்றி சோதிலிங்கமாக விளங்குவதால் பீமசங்கரம் எனப் பெயர்பெற்றது. கும்பகருணனின் பல மனைவிகளில் ஒருத்தி கற்கடி என்பவளாவாள். அவள் இப்பகுதியில் உள்ள காடுகளில் வாழ்ந்த அரக்கியாவாள். கற்கடிக்கு பீமன் என்ற மகன் உண்டு. பீமன் குழந்தையாக இருந்தபோதே அவனது தந்தையான கும்பகருணன் இராமனால் கொல்லப்பட்டான். பீமன் வளர்ந்து பெரியவனான பிறகு பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்து, பிரம்மனிடம் வரத்தை வாங்கி தன் வலிமையை பெருக்கிக்கொண்டான். பின்னர் பூவுலக மன்னர்களை வென்று, பிறகு இந்திர லோகத்தின்மீது படையெடுத்து அவர்களையும் வென்றான். இதனையடுத்து அவனுக்கு அஞ்சிய தேவர்கள் இந்த வனப்பகுதிக்கு வந்து சிவனை நோக்கி கடும் தவம் செய்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவனிடம் பீமனின் கொடுமைகளில் இருந்து விடுதலை வேண்டினர். பீமனை அழிப்பதாக சிவன் அவர்களுக்கு வரம் அளித்தார்.அதேசமயம் காமரூப நாட்டு அரசனும், சிவபக்கனுமான பிரியதருமன் என்பவனை போரில் வென்ற பீமன் அவரை சிறையில் அடைத்துக் கொடுமைகள் செய்தான். கொடுமைகளுக்கு ஆளான பிரியதருமனும் அவன் மனைவியும் சிறையிலேயே சிவலிங்கத்தை வைத்து சிவபூசை செய்து வந்தனர். தங்களின் துன்பத்தைப் போக்குமாறு வேண்டிவந்தனர். இதை சிறைக் காவலர்கள் பீமனிடம் கூறினர். கடும் கோபம்கொண்ட பீமன் தன் சூலத்தை எடுத்துக்கொண்டு பிரியதருமனைக் கொல்ல சிறைக்கு வந்தான். அங்கு சிவபூசை செய்துகொண்டிருந்த பிரியதருமன்மீது சூலத்தை ஏவினான். அப்போது லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான் அவன் விட்ட சூலத்தை தன் சூலத்தால் உடைத்தார். இதனையடுத்து சிவனிடம் போரில் ஈடுபட்ட பீமனை தன் நெற்றிக்கண்ணால் சிவன் எரித்து அழித்தார். இதனையடுத்து பிரியதருமன் தான் பூசித்த இந்த லிங்கத்தில் சோதியாகத் தங்கியிருந்து என்றும் மக்களைக் காக்குமாறு வேண்டினார். அவ்வாறே சிவபெருமான் அந்த லிங்கத்திலேயே சோதிவடிவில் ஐக்கியமாகி பக்தர்களைக் காத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

நம்பிக்கைகள்

முழுமை பெற்று, வைதீக முறைப்படி வழிபாடு தொடங்கியதாம். கோயிலின் சிகரங்களும் சபா மண்டபமும் 18ஆம் நூற்றாண்டில் நானா பட்னாவிஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1733 இல் சிம்மானாஜி சுந்தாஜி பிடேநாயக் என்ற குறுநில மன்னரால் கோயில் பலவாறு புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரகுநாத பேஷ்வாவினால் கோயிலின் பின்பக்கத்தில் அகண்ட கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி கரோகி என்ற சிற்றூரை கோயிலுக்கு கொடையாக அளித்துள்ளார். இக்கோயிலைச் சுற்றி அகண்ட திருச்சுற்று அமைந்துள்ளது. கோயிலின் முன்மண்டபம் விசாலமாக உள்ளது. கோயிலின் துண்கள், கதவுகள், விதானம் போன்றவை கலைவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலானது புரு மண்டபம், சபா மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. கோயிலில் வித்தியாசமான இரு நந்திகள் உள்ளன. வெளிப்புற தரைமட்டத்துக்குக் கீழே கருவறை அமைந்துள்ளது. படிக்கட்டுகளில் இறங்கிச் செல்லவேண்டும். கருவறை தரையை ஒட்டியுள்ள ஆவுடையாரில் ஒரு அடி உயர லிங்க மூலவர் உள்ளார். பக்தர்கள் கருவறையில் லிங்கத்தை சுற்றி அமர்ந்து வழிபடுகின்றனர். கோயில் வளாகத்தில் சனின் சிற்றாலயம் அமைந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

இக்கோயிலைச் சுற்றி அகண்ட திருச்சுற்று அமைந்துள்ளது. கோயிலின் முன்மண்டபம் விசாலமானதுக உள்ளது. கோயிலின் துண்கள், கதவுகள், விதானம் போன்றவை கலைவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலானது புரு மண்டபம், சபா மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. கோயிலில் வித்தியாசமான இரு நந்திகள் உள்ளன. வெளிப்புற தரைமட்டத்துக்குக் கீழே கருவறை அமைந்துள்ளது. படிக்கப்படுகளில் இறங்கிச் செல்லவேண்டும். கருவறை தரையை ஒட்டியுள்ள ஆவுடையாரில் ஒரு அடி உயர லிங்க மூலவர் உள்ளார். பக்தர்கள் கருவறையில் லிங்கத்தை சுற்றி அமர்ந்து வழிபடுகின்றனர். கோயில் வளாகத்தில் சனின் சிற்றாலயம் அமைந்துள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

திருவிழாக்கள்

சிவராத்திரி

காலம்

2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

பீமாசங்கர் கோயில் டிரஸ்ட்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பீமாசங்கர் கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

புனே

அருகிலுள்ள விமான நிலையம்

புனே

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top