Friday Dec 27, 2024

புத்திரன்கோட்டை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி

புத்திரன்கோட்டை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்) புத்திரன்கோட்டை, செய்யூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603401.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் இறைவி: ஸ்ரீ முத்தாம்பிகை

அறிமுகம்

ஸ்ரீ அகஸ்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஆலயம். இந்த ஆலயம் சூணாம்பேடு அருகில் உள்ள புத்திரன்கோட்டை கிராமத்தில் உள்ளது. கற்கோயிலாக விளங்கும் இவ்வாலயத்தில் நந்திமண்டபம் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் கிழக்கு நோக்கி இருக்கும் ஸ்ரீ அகஸ்தீஸ்வரரை தரிசனம் செய்யலாம். தென் திசை நோக்கிய அம்பாள் சன்னதி. பிரகாரத்தில் கன்னி மூலை கணபதி, வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகர், சண்டிகேஸ்வரர், நால்வர் மற்றும் பஞ்ச கோஷ்ட மூர்த்திகள். அம்பாள் திருநாமம் ஸ்ரீ முத்தாம்பிகை. ஒரு கால பூஜை இங்கு நடைபெறுகிறது. ஆலய அர்ச்சகர் திரு மாதாஜி-9840953704,. தொடர்புக்கு திரு ஹரிதாஸ்-9445727848,ஜெகதீசன்-9578340368. இங்கிருந்து சூணாம்பேடு 6 கிமீ. அருகில் உள்ள கிராமத்தில் ஆசிரமம் அமைத்து இருக்கின்ற ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் பெரிய தொகை செலவு செய்து இக்கோயிலை புதுப்பித்து கட்டி 2017 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள்.

நம்பிக்கைகள்

பரிகாரதலம்: புத்திர பாக்கியம் வேண்டுவோர், இத்திருக்கோயில் வந்து 48 நாட்கள் இறைவனுக்கு பால் அபிஷேகம் , அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் ஈசன் அருளால் புத்திர பாக்கியம் நிச்சயம் ஏற்படும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புத்திரன்கோட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top