Thursday Dec 26, 2024

புத்தகரம் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

புத்தகரம் சிவன்கோயில்,

புத்தகரம், கூத்தாநல்லூர் வட்டம்,

திருவாரூர் மாவட்டம்.

இறைவன்:

சிவன்

அறிமுகம்:

திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் → மாவூர் வந்து, வடபாதிமங்கலம் சாலையில் 5 கிமீ-ல் உள்ள ஊட்டியாணியில் தெற்கில் திரும்பி புள்ளமங்கலம் → மணக்கரை → சேந்தங்குடி அடையலாம். இந்த சேந்தங்குடியின் உட்கிராமம் தான் பொய்கைநல்லூர், புத்தகரம். வெண்ணாற்றின் மேற்கு பகுதியில்தான் இந்த மூன்று ஊர்களும் அமைந்துள்ளது. இந்த மூணு ஊர்களிலும் சிவன் கோயில்கள் உள்ளது. சேந்தங்குடியின் தெற்கு பகுதிதான் புத்தகரம் இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயில் சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளது. அருகில் ஒரு வைணவ கோயில் உள்ளது. அருகில் இரண்டு பெரிய குளங்கள் உள்ளன.

கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை உள்ளது முகப்பில் ஒரு கூம்பு வடிவ கூரையுடன் அர்த்த மண்டபம் உள்ளது. முன்னூறு ஆண்டுகள் பழமை எனலாம். அதற்கு முன்னர் அகன்ற நவீன கால கான்கிரீட் மண்டபம் உள்ளது. அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகனும் லிங்கோத்பவரும் துர்க்கையும் உள்ளனர். தென்மேற்கில் விநாயகர் ஆலயமும் வடமேற்கில் முருகனுக்கு ஆலயமும் சற்று பெரிய அளவில் உளளன. வடகிழக்கில் நவக்கிரக மண்டபம் சமீப கால கான்கிரீட் மண்டபமாக உள்ளது. கோயில் நல்ல பராமரிப்பில் உள்ளதாக சொல்ல இயலாது. கோயிலின் கிழக்கு மற்றும் தெற்கு வாயில் முழுதும் நெல் மூட்டைகள் அடுக்கி வரவழியின்றி உள்ளது. அதனால் கோயிலுக்கு ஏதும் வருவாய்க்கு வழியுண்டா தெரியவில்லை. கால சுழற்சியில் தனக்கென விரல்விட்டெண்ணும் அளவு பக்தர்களுடன் சிவன் நாட்களை கடத்தி வருகிறார்.

”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புத்தகரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top