புதூர் ராமநாதசுவாமி சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
புதூர் ராமநாதசுவாமி சிவன்கோயில்,
புதூர், திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610202.
இறைவன்:
ராமநாதசுவாமி
இறைவி:
பர்வதவர்த்தினி
அறிமுகம்:
இந்த புதூர் கிராமமானது, திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் பாங்கல் நால் ரோடு என்ற இடத்தில் இருந்து மேற்கே சுமார் 3 கிமீ தொலைவில் வெண்ணாற்றின் மேற்கு கரையில் உள்ளது. திருநெல்லிக்காவுக்கு சற்று முன்னதாக உள்ள ஊராகும். ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் எனும் மகான் இவ்வூரில் அவதரித்தவர், அவருக்கு இங்கு ஒரு மடாலயமும் உள்ளது. சில நூற்றாண்டுகளின் முன்னர் இங்கு புத்தர் வழிபாடும் இருந்துள்ளது. புத்தர் சிலை ஒன்றும் உள்ளது. பிரதான சாலையை ஒட்டி பெரிய இரண்டு குளங்கள் உள்ளன, இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் அழகிய சிறிய கோயில் திருமகள் உருவாக்கி வழிட்ட தலம் எனப்படுகிறது, மேலும் இலங்கைக்கு செல்லும் வழியில் ஸ்ரீ ராமர் இங்கு. ஒரு நெல்லி மரத்தின் கீழ் ஓய்வெடுக்கும் போது, ஒரு சிவலிங்கம் நிலத்தடியில் இருப்பதையும், உணர்ந்தார். மீண்டும் சிவலிங்கத்தை வெளியே கொண்டு வந்து ஸ்ரீ ராமர் அதனை பூஜித்தார். சிவலிங்கத்தை ஸ்ரீ ராமர் வழிபட்டதால் ஸ்ரீ ராமநாதசுவாமி எனப்படுகிறார். இறைவன் – ராமநாதசுவாமி இறைவி- பர்வதவர்த்தினி
கிழக்கு நோக்கிய திருக்கோயில், இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாகவும், கருவறை வாயிலில் இரு விநாயகர்களும், வள்ளி-தெய்வானை முருகனும் உள்ளனர். அழகிய வடிவில் அம்பிகை தெற்கு நோக்கியுள்ளார். இக்கோயில் தேவகோட்டை நகரத்தார்களால் 1945 திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது, அதன் பின்னர் எப்போது குடமுழுக்கு நடைபெற்றது என தெரியவில்லை. விமான கட்டுமானம் தவிர மேல்மட்டம் வரை கருங்கல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கருவறையுடன் இணைந்த முகப்பு மண்டபம் உள்ளது. அதன் வெளியில் நந்தி மண்டபம் பலி பீடமும் உள்ளது. கருவறை கோட்டங்களில் விநாயகர் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார்.
தென்மேற்கில் பொன்மணிகண்டன் எனும் பெயரில் ஐயப்பன் சன்னதி ஒன்றுள்ளது. பிரகார சிற்றாலயங்கள் என எதுவும் இல்லை. வடகிழக்கில் கிணறு ஒன்றுள்ளது. பல ஆண்டுகளாக கோயில் திருப்பணிகள் செய்யப்படாமல் பெரிய அளவில் பழுதடைந்துள்ளது. மடைப்பள்ளி இடிந்துள்ளது. உக்கிராண அறையும் சிதைவுற்றுள்ளது. விமானங்களில் மரங்கள் முளைக்க தொடங்கி உள்ளன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புதூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி