Saturday Nov 16, 2024

புதுப்பாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு

முகவரி

புதுப்பாக்கம் மத்தளேஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), புதுப்பாக்கம், , திருப்போரூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்- 631502.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் இறைவி : ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்

புதுப்பாக்கம் கிராமத்தில் பழமையான சிவன் கோயில் உள்ளது. இறைவன் திருநாமம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர். இறைவி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி. சிவ கோஷ்டத்தில் உள்ள பஞ்ச கோஷ்டம் போல் அம்பாளுக்கும் பஞ்ச கோஷ்ட தேவிகள் உள்ளனர். 2006 ஆம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிரகாரத்தில் கருவறை பின்புறம் ஆதி அகஸ்தீஸ்வரர் சிவலிங்கம் காணப்படுகிறது. விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், பைரவர், சண்டிகேஸ்வரர், நவகிரக சன்னதிகள் உள்ளன. இரண்டு வேளை பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு வாசுதேவன்-9444118745. தல விருட்சம் நாவல். அனைத்து உற்சவங்களும் இங்கு விமரிசையாக நடைபெறுகின்றன.

நம்பிக்கைகள்

பரிகார தலம்: இழந்த செல்வம், இழந்த பொருட்கள் மீட்கவும் பரிகாரம் அளிக்கும் தலமாக விளங்குகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புதுப்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top