பிஷ்ணுபூர் சரேஸ்வர் மற்றும் சைலேஷ்வர் கோவில், மேற்கு வங்காளம்
முகவரி
பிஷ்ணுபூர் சரேஸ்வர் மற்றும் சைலேஷ்வர் கோவில், நிகுஞ்சபூர் – ஜாய்கிருஷ்ணாபூர் சாலை, திஹார், மேற்கு வங்காளம் – 722165
இறைவன்
இறைவன்: சரேஸ்வர் மற்றும் சைலேஷ்வர் (சிவன்)
அறிமுகம்
பிஷ்ணுபூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள திஹார் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த இரட்டை கோவில்கள் மகாதேவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திஹார் கிராமத்தில் இரண்டு பாழடைந்த கோவில்கள் உள்ளன. இரண்டு கோவில்களும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை, அவை சரேஸ்வர் மற்றும் சைலேஸ்வர் என அழைக்கப்படுகின்றன. சரேஸ்வர் கோவிலின் நுழைவாயிலில் ஒரு நந்தி உள்ளது. சரேஸ்வர் மற்றும் சைலேஸ்வர் கோயில்கள் இந்திய தொல்பொருள் ஆய்வு (ஏஎஸ்ஐ) கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்.
புராண முக்கியத்துவம்
சரேஸ்வர் மற்றும் சைலேஸ்வர் கோவில்கள் சிறிய மேட்டின் மேல் அமைந்துள்ளன. மல்லா மன்னர் பிரித்வி மல்லாவால் 1346 இல் கட்டப்பட்ட இந்த கோவில்கள் ஒரியா தேயூல் பாணியிலான கட்டிடக்கலை முறையைப் பின்பற்றுகின்றன. சரேஸ்வர் மற்றும் சைலேஸ்வர் இரண்டின் கோபுரங்கள் நீண்ட காலத்திற்க்கு முன்பு சரிந்துவிட்டன. கோவிலில் அதன் வெளிப்புற சுவர்களில் அழகான வேலைப்பாடுகள் உள்ளது, ஆனால் அதில் பெரும்பாலானவை இயற்கையின் சக்திகளாலும் மனிதர்களின் புறக்கணிப்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. சரேஸ்வர் கோவிலுக்கு முன்னால் நந்தி உள்ளது. அதனால் இக்கோவிலுக்கு இப்பெயர் வந்திருக்கலாம் (சர் என்றால் காளை என்று பொருள்). இயற்க்கையின் மாற்றத்தினால் நந்திதேவரின் சிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சிவராத்திரி திருவிழாவின் போது, அண்டை பகுதியிலிருந்து, ஏராளமான பக்தர்கள் இந்த கோவில்களுக்கு வருகை தருகின்றனர்.
திருவிழாக்கள்
“மகாசிவராத்திரி” திருவிழா மற்றும் ‘கஜன்’
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பிஷ்ணுபூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பிஷ்ணுபூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கொல்கத்தா