பிள்ளையாம்பேட்டை சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
பிள்ளையாம்பேட்டை சிவன்கோயில் கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 103.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
கும்பகோணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது அம்மாசத்திரம். அதற்க்கு சற்று முன்னதாக உள்ளது பிள்ளையாம்பேட்டை. நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் இருந்தாலும் ஊர் வடக்கில் ஒரு கிமி தூரம் செல்லவேண்டும். பிள்ளையார் பேட்டை என்று இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். கங்காவிசர்ஜனரை போல காவிரியும் ஒவ்வொரு ஆறாக பிரித்து விட்டுக்கொண்டே வருகிறாள், இவ்வூரிலும் வீரசோழன் – காவிரி என இரண்டாக பிரிகிறாள். இந்த வீரசோழனின் தெற்கில் தான் இந்த பிள்ளையாம் பேட்டை அமைந்துள்ளது. ஊரில் இருந்து தனித்து ஆற்றை நோக்கி செல்லும் ஒரு சிறிய பாதையில் தான் இந்த சிவன்கோயில் அமைந்துள்ளது. கோயில் தனித்துள்ளதால் கோயில் வழிபாடுகள் குறைந்து தற்போது பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளனர் எந்தையும் தாயும். கோயில் செங்கல் தளி என்பதால் சரியான பராமரிப்பில்லாமல் சிதைந்துவிட்டது. முகப்பு வாயில் மட்டும் உள்ளது சுற்று சுவர்கள் இடிந்து காணாமல் போயின, இறைவன் இறைவியின் மேல் பூக்கள் உதிர்வதற்கு பதில் விதானம் விரிசல் கண்டு செங்கற்கள் உதிர துவங்கி உள்ளன. குறுக்கும் நெடுக்குமாய் விரிசல்கள்…. விநாயகர் சன்னதி மட்டும் திருப்பணி செய்யப்பட்டு முற்றுபெறாமல் உள்ளது, அதில் மீந்த சுண்ணச்சாந்தை முருகன் சன்னதி மீதும் அப்பி விட்டு போயிருக்கின்றனர். சண்டேசர் சன்னதி மண்ணுக்குள் புதைவதுபோன்றதொரு நிலை. வடகிழக்கில் உள்ள மண்டபம் பைரவர் சனி இவர்களுக்கானது, அதுவும் வெற்றிலைக்காவி படிந்த பற்கள் போல ஈ… என்று செங்கல் காட்டி நிற்கிறது. விநாயகர் சிலை,அம்பிகையின் நந்தி இன்னும் பல சிலைகளை காணவில்லை. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பிள்ளையாம்பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி