பாளி மகாதேவர் கோவில், சத்தீஸ்கர்
முகவரி
பாளி மகாதேவர் கோவில், சாந்தி நகர் சாலை, பாலி, கோர்பா மாவட்டம், சத்தீஸ்கர் – 495449
இறைவன்
இறைவன்: மகாதேவர்
அறிமுகம்
சத்தீஸ்கரின் பாளியில் உள்ள மகாதேவர் கோவில் 9 ஆம் நூற்றாண்டு கோவில். கோர்பா-பிலாஸ்பூர் சாலையில் கோர்பா மாவட்டத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் பாளி அமைந்துள்ளது, முதலில் பனா வம்சத்தின் மன்னர் விக்ரமாதித்யாவால் கி.பி. 870 – 900-ஆம் நூற்றாண்டு இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் பெரிய குளத்தின் ஓரத்தில் அமைந்துள்ளது. உயரமான மேடையில் மணற்கற்களால் கட்டப்பட்ட இந்த கிழக்கு கோவில், முகப்பு மண்டபம், கர்ப்பகிரகம் (கருவறை), கோபுரம் மற்றும் எண்கோண மண்டபம் கொண்டுள்ளது. நுழைவாயிலுக்கு எதிரே சிறிய நந்தி உள்ளது. கருவறையில் சிவலிங்கம் உள்ளது. கருவறை வாசல் நுழைவாயில் கங்கை மற்றும் யமுனாவின் உருவங்களுடன் துவாரபாலகர்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மண்டபம் பிரம்மா, கிருஷ்ணர், சரஸ்வதி, மகிஷாசுரமர்த்தினி மற்றும் கஜலக்ஷ்மி ஆகியோரின் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் கட்டமைப்பு கஜுராஹோ கோவிலுக்கு மிகவும் ஒத்திருக்கிறது. சிற்பங்கள் இடிந்த நிலையில் தற்போது உள்ளன. மத்திய இந்திய மாநிலமான சத்தீஸ்கரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பழங்கால சிவன் கோவில் இது. இப்போது பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக உள்ள இந்த கோவிலில் பல்வேறு தெய்வங்களை சித்தரிக்கும் சில நேர்த்தியான சிற்பங்கள் உள்ளன. உள்ளே மற்றும் வெளிப்புற சுவர்களில் பாழடைந்த சிற்பங்கள் சிதறிக்கிடக்கின்றன.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாளி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோர்பா நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
பிலாஸ்ப்பூர்